பிரபல நடிகையை சாய்த்த பூசாரி.. அபார்ஷன் வேற.. கொடைக்கானலில் பதுங்கியிருந்த கார்த்திக் முனுசாமி கைது
சென்னை: பிரசாதம் தந்து நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில், சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி மீது, பிரபல டிவி நடிகை ஒருவர் சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தந்திருந்தார்.

புகார்: அந்த புகாரில், "பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயில் பூசாரியாக உள்ள கார்த்திக் முனுசாமி எனக்கு நட்பானார்.. அவர் ஒருநாள் கோயில் தீர்த்தம் கொண்டுவந்து தந்தார்.. அதை குடித்ததுமே மயங்கிவிட்டேன். பிறகு கண்விழித்து பார்த்த போது நான் நிர்வாணமாக படுக்கை அறையில் இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
பிறகு கார்த்திக் முனுசாமிக்கு போன் போட்டு இதைபற்றி கேட்டேன், அதற்கு அவர், என்னைஉடனடியாக திருமணம் செய்து கொள்வதாக சொன்னார். அவருக்கு முதல் மனைவி பிரியா இருந்தும், என் வீட்டிலேயே எனக்கு தாலி கட்டினார். இதையடுத்து, நாங்கள் கணவன் மனைவி போல் குடும்பம் நடத்தினோம். கருவுற்ற எனக்கு கட்டாயப்படுத்தி அபார்ஷன் செய்தார்.
விஐபி: பின்னர், விஐபி நண்பர் என்று சொல்லி, ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து, நெருக்கமாகவும் இருக்க சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார். அவரது தோழி சுவேதா என்பவர், என்னை பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தினார். கார்த்திக் முனுசாமியின் மனைவி பிரியாவும், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக என்னை மிரட்டினார்.
என்னுடைய வாழ்க்கையை சீரழித்த கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் நடிகை தேவி கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து, இந்த புகாரின்பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பூசாரி கார்த்திக் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தது.. மேலும், அவரது செல்போனிலிருந்து பெண்களின் ஆபாச வீடியோக்களையும் போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்..
லுக் அவுட் நோட்டீஸ்: ஆனால், அதற்குள் பூசாரி மாயமாகிவிட்டதால், 6 வழக்குகளின் கீழ் வழக்கும் பதிவு செய்து, அவரை போலீசார் தேடி வந்தனர். கார்த்திக் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸும் விடுக்கப்பட்டது..
மற்றொருபுறம், பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகர் கார்த்திக்கை, கோயில் அறங்காவலர் குழு முடிவின்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.. அதேபோல, அர்ச்சகர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, அர்ச்சகர், அறங்காவலர் குழு தலைவர் உறுப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது எஸ்பிளனேடு போலீசில் இந்த புகார் மனுவும் தரப்பட்டுள்ளது. ஆனால், முன் ஜாமீன் கோரி கார்த்திக் முனுசாமி சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
புது வழக்கு: இதனிடையே நேற்றைய தினம், சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த சாலிகிராமத்தைச் சேர்ந்த பெண் சென்னை ஹைகோர்ட்டில் நேற்றைய தினம் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
தான் புகார் அளித்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கையை வைத்திருக்கிறார் அந்த பெண்.. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்த துவங்கியிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில்,காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த பூசாரியை காவல்துறை கைது செய்திருக்கிறது.
பரபரப்பு: தற்போது அவரை சென்னைக்கு அழைத்துவரும் நடவடிக்கையிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.,,இதற்கு பிறகுதான் அவரிடம் விசாரணையை போலீசார் நடத்த உள்ளனர்.. ஏற்கனவே, இந்த விவகாரம் பெரிதாகி உள்ளநிலையில், போலீஸ் விசாரணையில் இன்னும் பல பூதாகரங்கள் அர்ச்சகர் தரப்பிலிருந்து வெளியாகும் என்ற நம்பப்படுகிறது.
விருகம்பாக்கம்: இந்த வழக்கு தொடர்பாக, காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.. கார்த்திக் முனுசாமி எத்தனை வருட காலம் அங்கே அர்ச்சகராக பணிபுரிகிறார்? வேறு எந்த பெண்ணிடமாவது இப்படி தவறாக நடந்து மோசடி செய்திருக்கிறாரா? என்ற விசாரணையையும் மேற்கொண்டனர்.
இந்நிலையில்தான், கொடைக்கானலில், அர்ச்சகர் பதுங்கியிருப்பதாக விருகம்பாக்கம் மகளிர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விரைந்து சென்ற போலீசார், அர்ச்சகரை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். தற்போது, மதுரவாயல் போலீஸ் ஸ்டெஷனில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறதாம்..!!
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications