இறால், வஞ்சிரம் மீன்.. திடீர்னு சென்னை காசிமேட்டில் திரண்ட கும்பல்.. 1 வாரம் இருக்கே? அதுக்குள்ளேயா?
சென்னை: சென்னை காசிமேட்டில் நேற்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, ஒரே பரபரப்பும், கலக்கமும் சூழ்ந்துவிட்டது. திடீரென மீன்பிரியர்களும் திரண்டு வந்துவிட்டனர்.. இதற்கு என்ன காரணம்?
வருடந்தோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலமாக தமிழக அரசு உத்தரவின் பேரில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

என்ன காரணம்: அதாவது, கோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகமாக நடைபெறும். இந்த காலங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும். விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச்செல்லும்போது படகுகள் மற்றும் வலைகளில் அடிப்பட்டு மீன் குஞ்சுகள் அழியும் நிலை உள்ளது,.. அதனால்தான், இந்த காலகட்டத்தில் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.
மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கணக்கில் கொண்டும், கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலும் இந்த மீன்பிடித் தடைக்காலத்தை அரசு அறிவித்து, செயல்படுத்தியும் வருகிறது.
தடைகாலம்: தடைக்காலம் அமலுக்கு வந்துவிட்டால், கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுச்சேரி கடல்பகுதி மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுவிடும். இதன்காரணமாக, தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்களுக்கு வேலையின்றி தவிக்கும் நிலைமை ஏற்படும்.
இதுபோன்ற காலகட்டத்தில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் போன்ற பகுதிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்திவிடுவார்கள்..
மீனவர்கள்: குட்டி குட்டி படகுகள் மூலம், கரையோரத்தில் மட்டுமே மீன் பிடித்தல் நடைபெறும்.. அதுமட்டுமல்லாமல், மீன் பிடி தடை காலத்தை பயன்படுத்தி பழுதடைந்துள்ள விசைப்படகுகள் மற்றும் வலைகளை சீரமைப்பது மீனவர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. அதைவிட முக்கியமாக, மீன்பிடி தடைகாலம் ஆரம்பமாகிவிட்டால், மீன்களின் விலையும் அதிகரித்துவிடும்.
அந்தவகையில், இந்த வருடத்துக்கான மீன்பிடித் தடைக்காலம் வருகிற 14-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஆரம்பமாகிறது.. மீன் பிடி தடைக்காலம் மொத்தம் 61 நாட்கள் நடைமுறையில் இருக்கும்.
அறிவுறுத்தல்: எனவே, மீனவர்கள் தங்களது படகுகளை ஏப்ரல் 14ம் தேதி இரவு 12 மணிக்குள் பதிவு செய்யப்பட்ட தங்குதளத்துக்கு கொண்டுவந்து நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.. மீன்பிடி தடைக்காலத்தில் விதிகளை மீறி மீன்பிடிப்புகளில் ஈடுபடும் படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
ஆக, மீன்பிடி தடைக்காலத்திற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்ப தொடங்கியிருக்கிறார்கள்.. விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமையும் குறைந்த விசைபடகுகளே திரும்பின.
விலை உயர்வு: இதன் காரணமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விலை அதிகரித்தது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.900க்கு விற்கபட்ட வஞ்சிரம் நேற்று ரூ.1300க்கு விற்பனையானது. கொடுவா மீன் ரூ.400க்கு விற்பனை விற்கப்பட்டு வந்த நிலையில், நேற்றை யதினம் ரூ.600க்கு விற்பனையானது.
அடுத்த வாரம் முதல் மீன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மீன் விலை இப்போதே உயர துவங்கிவிட்டது, அசைவ பிரியர்களுக்கு கவலையை தர துவங்கிவிட்டது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications