சென்னை காசிமேட்டில் ஆச்சரியம்.. எல்லாரும் ஒன்னு சேரப்போறாங்களாமே? தமிழ்நாட்டு அரசியலில் செம ட்விஸ்ட்
சென்னை: சென்னை காசிமேட்டில் ஒரே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. இதைக்கேள்விப்பட்டு தமிழக மக்களே ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறார்கள்.. என்னவாம்?
தங்களது உரிமைகளை தாங்களே மீட்டெடுத்து கொள்வதற்காகவும், தங்களுக்கான நலன்களை தாங்களே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, பல்வேறு தரப்பினர், தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது வழக்கம்.
விவசாயிகள்: இப்படித்தான், நாட்டையே உலுக்கும் அளவுக்கு அன்று டெல்லி விவசாயிகள் போராட்டம் நடந்தது.. அப்போது விவசாயிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, புதுகட்சியை ஆரம்பித்து, தேர்தலில் போட்டியிடவும் செய்தார்கள்.

அவ்வளவு ஏன்? பாஜக ஆதரவாளரும், நடிகருமான எஸ்வி சேகர்கூட சமீபத்தில் ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், "பிராமணர்களுக்காக தமிழகத்தில் விரைவில் புதிய கட்சி தொடங்கப்படும், பெயர், கொடி கிடைத்தவுடன் புதிய கட்சி ஆரம்பிக்கப்படும்.. பிராமணர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகவே இந்த கட்சி தொடங்கப்படுகிறது. சட்டசபையில் ஒரு பிராமணர் கூட எம்எல்ஏவாக இல்லை" என்று தன்னுடைய விருப்பத்தை கூறியிருந்தார் எஸ்வி சேகர்.
மீனவர்கள்: அந்தவகையில், இப்போது மீனவர்களும் தனிக்கட்சி ஆரம்பிக்க போகிறார்களாம்.. மீனவ சங்கங்களை ஒருங்கிணைந்து அரசியல் கட்சி துவங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று காசிமேட்டில் நடந்துள்ளது.. அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், பல்வேறு மீனவ சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இதுகுறித்து நாஞ்சில் ரவி சொல்லும்போது, மீனவர்கள் நலன்களை காக்கும் வகையில், புதிய அரசியல் கட்சி துவங்க போகிறோம்.. மீனவர்கள் கட்சி துவங்குவதற்கு காரணமான அதிமுக, திமுக கட்சிகளுக்கு நன்றி.. திருவள்ளூர், ஆரம்பாக்கம் துவங்கி கன்னியாகுமரி வரை, 610 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகளை ஒருங்கிணைந்து, ஒற்றை தலைமையில் இந்த கட்சி உருவாக்கப்படும்.
மீனவர்கள்: தமிழகம் முழுவதும் மீனவர்களுக்கு 12 சதவீதம் ஓட்டு வங்கி இருக்கிறது.. அதிமுகவில் உள்ளது போன்ற சட்ட விதிகளை பின்பற்றி இந்த கட்சி அமைக்கப்படுகிறது.. பொது குழு உறுப்பினர்கள் வாயிலாகவே செயலாளர், பொருளாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்காக சட்ட வல்லுனர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட போகிறோம்.. அதற்குள் தேர்தல் கமிஷனில் கட்சி பதிவு செய்யப்படும்.. சென்னையில் விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தி கட்சி பெயர், சின்னத்தை அறிவிக்க உள்ளோம்.
மிகப்பெரிய சக்தி: எப்படியும் வரப்போகும் சட்டசபை தேர்தலில், 50 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். 100 தொகுதிகளில், வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுப்போம்.. கட்சி துவக்க பணிக்காக அனைத்து மாவட்டங்களில் திண்ணை பிரசாரம் செய்யும் பணிகளும் விறுவிறுப்பாக ஆரம்பமாகி உள்ளது என்று கூறியிருக்கிறார்.
எப்போதோ வரப்போகும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக, இப்போதே கட்சியை ஆரம்பித்தவர் நடிகர் விஜய்.. இதே யுக்தியைதான் மீனவ அமைப்புகளும் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஆமா, "மீனவர்கள் கட்சி துவங்குவதற்கு காரணமான அதிமுக, திமுக கட்சிகளுக்கு நன்றி" என்று சொல்லியிருக்கிறாரே நாஞ்சில் ரவி?? என்னவா இருக்கும்? நிஜமாகவே சொல்றாரா? அல்லது வஞ்சப்புகழ்ச்சியா?? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!!
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications