சென்னை காசிமேட்டில் ஒரே பரபரப்பு.. டக்கென வந்த "ராட்சசன்".. மிரண்ட மீனவர்கள்.. குவிந்த மக்கள்.. வாவ்
சென்னை: சென்னையில் காசிமேடு பகுதியே நேற்று பிஸியாகிவிட்டது.. பொதுமக்களும், மீன்பிரியர்களும் காசிமேடு மீன்பிடி சந்தையில் குவிந்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை காசிமேடு பகுதியை பொறுத்தவரை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் தினசரி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. அதுவும், வாரஇறுதி விடுமுறையை கணக்கு செய்து, முன்கூட்டியே மீன்பிடிக்க சென்றுவிடுவார்கள்..

ஞாயிற்றுக்கிழமை: எனவே, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் காசிமேடு மீன்பிடி சந்தையில் திருவிழா போல கூட்டம் அலை மோதுவது வழக்கமான ஒன்றுதான்.. அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்றும் கணிசமான விசை படகுகளில் மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் பெரிய வகை மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது.
இதனால், மீன்களை வாங்க ஏராளமான மீன் பிரியர்கள் காசிமேட்டில் குவிந்தனர். நேற்று அதிகாலை 2 மணி முதலே சுற்று வட்டார பகுதியில் உள்ள மீன் பிரியர்கள் மீன் வாங்க திரண்டிருந்ததால், காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியே களைகட்டியிருந்தது.. இந்த வாரம் ஏராளமான கடைகளும் திறக்கப்பட்டிருந்ததால், தேவையான மீன்களை நல்ல விலையில் வாங்கி சென்றனர்..
அரபிக்கடல்: முன்னதாக, ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்த 200 படகுகள் நேற்று அதிகாலைதான் கரை திரும்பியிருந்தன.. அப்போது வவ்வால், வஞ்சிரம், சங்கரா உள்ளிட்ட மீன்கள் அதிகளவு பிடிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், ஒரு விசைப் படகில் ராட்சத மீன் கொண்டுவரப்பட்டிருந்தது..
ஏமன் கோலா என்று சொல்லப்படும் அந்த ராட்சத மீன் 300 கிலோ எடையும், 15 அடிநீளமும் இருந்தது.. எனவே, இந்த மீனை மீனவர்கள் கிரேன் மூலம் படகில் இருந்து கரைக்கு கொண்டு வந்தார்கள்.. இந்த மீனை அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடனும், ஆர்வத்துடனும் பார்த்தனர்.. பலரும் அந்த ராட்சத மீனை செல்போனில் வீடியோ, போட்டோக்களை எடுத்து கொண்டார்கள்.

ஏமன் கோலா: இதுகுறித்து, மீனவர்கள் சொல்லும்போது, "ஆழ்கடலில் மீன்பிடித்தபோது இந்த ராட்சத "ஏமன் கோலா" மீன் எங்களுக்கு பிடிபட்டது. இதை மிகவும் கஷ்டப்பட்டு படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தோம்.. கேரளா மற்றும் இலங்கையில் இந்த மீன் விரும்பி சாப்பிடுவார்கள்.. இந்த மீனை ஏலம் மூலம், விற்பனை செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய போகிறோம்" என்றனர்.
ஏலத்தில் மீன் விற்கப்படுவதால், இந்த மீனை எவ்வளவு பணம் கொடுத்து வாங்க போகிறார்கள்? என்ற ஆர்வம் மீன்பிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications