கிட்ட நெருங்கிடுச்சு.. ஒரே மாசத்தில் காசிமேட்டில் அற்புதம்.. சென்னை திருவொற்றியூரிலும் புது மாற்றம்
சென்னை: சென்னை காசிமேட்டில் சூரை மீன்பிடித் துறைமுகம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. இது வடசென்னை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகமானது, கடந்த 1980ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.. இங்கு தினமும், 200 டன் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. ஆனாலும், வடசென்னையை சேர்ந்த ஒட்டுமொத்த மீனவர்களும், காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தை பயன்படுத்த வேண்டிய சூழல் இருப்பதால், இங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மீன்பிடி துறைமுகம்: அதனால்தான், கடந்த 2018 ஜூனில், திருவொற்றியூரில், 200 கோடி ரூபாய் செலவில், சூரை மீன்பிடித்துறைமுகம் கட்டப்படும் என்று அப்போதைய அதிமுக அரசு அறிவித்தது... அன்றைய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரும், 2019ல், இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, துவக்கி வைத்தார்.. இதையடுத்து, மீன்வளத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் சூரை மீன்பிடித் துறைமுக கட்டுமான பணிகள் துரித கதியில் ஆரம்பமாகின.
அதாவது, கடலில் எழும் தெற்கு அலையை தடுக்கும் பொருட்டு, 849 மீட்டர் துாரமும், வடக்கு அலையை தடுக்கும் பொருட்டு, 550 மீட்டர் தூரமும், ராட்சத பாறாங்கற்கள் கொட்டி தூண்டில் வளைவு போன்ற தடுப்பு சுவர் அமைத்தும், கற்கள் சரிந்து விழாதபடி, கான்கிரீட் நட்சத்திர கற்களும் பக்கவாட்டில் அடுக்கப்பட்டும், இந்த பணிகள் துவங்கின.
தடுப்பு சுவர்: இந்த தடுப்பு சுவர் கடல் பகுதியில், இடது கை உள்பக்கமாக வளைந்தபடியாகவும், வலது கை மேல்பக்கமாக அணைத்தாற்போலும் உள்ளதால், மீன்பிடி துறைமுக வளாகத்தில் ராட்சத அலை எழுவது தவிர்க்கப்படும். அதுமட்டுமலலாமல், புயல், பெருமழை, கடல் சீற்றத்தின்போது, படகுகளை பத்திரமாக நிறுத்தி வைக்க முடியும்.
தற்போது, தென்கிழக்கே கடல் அலை உட்புகாமல் இருக்க 2,801 அடி தூரம் தடுப்புச் சுவரும், வடகிழக்கே அலையைத் தடுக்கும் விதமாக 1,815 அடி தூரம் கான்கிரீட் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
படகுகள்: இதைத்தவிர, 1,815 அடி தூரத்துக்கு பெரிய மற்றும் சிறிய படகுகளை நிறுத்துவதற்கான தளங்கள், ஓய்வறை, மீன்கள் ஏலக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நடந்து வருகின்றன.. இப்போதைக்கு 80 சதவீத பணிகள் முடிந்துவிட்ட நிலையில், படகு பழுது பார்ப்பு தளம் அமைக்கும் பணி மட்டுமே மிச்சமிருக்கிறதாம். எப்படியும் அடுத்த மாதம் அனைத்து பணிகளும் முடிவடைந்து, இந்த துறைமுகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்களாம்.
இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டால், 300 சிறிய படகுகள், 500 பெரிய படகுகள் என 800-க்கும் மேற்பட்ட படகுகளை நிறுத்த முடியும். வருடத்துக்கு 80 ஆயிரம் டன் மீன்களை கையாள முடியும். காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இடப்பற்றாக்குறை பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்..!!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications