சென்னை காசிமேட்டில் கூட்டம்.. தூத்துக்குடியிலும் சால்மன் மீன் 1 கூடை ரூ.2500.. ஏறிய ஷீலா, மத்தி விலை
சென்னை: ஆடி மாதம் முடிந்து ஆவணி துவங்கியுள்ள நிலையில், மீன்களை வாங்க மீன் பிரியர்கள் இன்று சனிக்கிழமையே குவிந்துவிட்டனர்.. இத்தனைக்கும் மீன் வரத்து குறைவாக இருந்தபோதிலும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மீன் மார்க்கெட்களில் மீன்களை வாங்க கூட்டம் அலைமோதியது.. நாளையும் விடுமுறை தினம் என்பதால், மார்க்கெட்களில் இன்று நள்ளிரவு முதலே கூட்டம் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அந்தவகையில் இன்று மீன்களின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
ஆடி மாதம் என்றாலோ தமிழகத்தின் கால்நடை சந்தைகளில் ஆடுகள், கோழிகளின் வரத்து அதிகரித்துவிடும்.. இதனால், வியாபாரமும் சூடுபிடித்துவிடும்.

ஆடி மாதத்தில் வரும் ஆடிப் பண்டிகையை முன்னிட்டு, ஆடுகளை பலி கொடுப்பதற்கும், இறைச்சிக்காகவும் வாங்க நேரிடுகிறது.. குலதெய்வ கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல் உள்பட பல திருவிழாக்கள், காதணி விழா போன்றவைகளுக்கும் ஆடுகளின் தேவை பெருகுகிறது.
ஆடி முடிந்து ஆவணி
அதுமட்டுமல்ல, புதுமண தம்பதிகள் முதல் ஆடியாகவும், ஆடி கடைசி வாரத்தில் கடைசி ஆடியாகவும் கொண்டாடி மகிழ்கிறார்கள். இதனாலும்கூட, பெரும்பாலான வீடுகளில் ஆடி துவக்கத்திலும் இறுதியிலும் அசைவ உணவே இடம்பெறும். எனவே இறைச்சி கடைகளில் வழக்கமான விற்பனையை விட ஆடி பண்டிகையில் விற்பனை பல மடங்காகும்.. இதில் மீன்களையும் தவிர்க்க முடியாது.
ஆடி மாதம் நடந்தபோது, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், கூட்டம் அலைமோதியது.. இப்போது ஆடி முடிந்த நிலையிலும்கூட வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.. ஒருசிலர் அசைவ உணவுகளை ஆடி மாதம் தவிர்த்து விடுவார்கள்.. எனவே, ஆவணி துவங்கி நடந்து வருவதால், மீன்களுக்கான கிராக்கியும் அதிகரித்துவிட்டது.
வஞ்சிரம், மத்தி மீன், நெத்திலி
அந்தவகையில், வஞ்சிரம் மீன் ரூ.1,800 வரை விற்பனையான நிலையில், கடந்த 17ம் தேதி ரூ.1,400 வரை விற்பனையானது.. நீலகிரியில் மீன் வகைகளில், வஞ்சரம் கிலோ ரூ. 600, மத்திமீன் கிலோ ரூ. 300, பாறை கிலோ ரூ. 300, நெத்திலி கிலோ ரூ. 200 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. .
பொதுவாக, நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆழ் கடலில் தங்கி, மீன் பிடித்து சனிக்கிழமை அதிகாலை கரைக்கு திரும்புவது வழக்கமாகும்.. அப்படி நாட்டுப்படகு மற்றும் ஃபைபர் படகுகளில் சென்ற மீனவர்கள் அதிக அளவில் மீன்களை கொண்டு வருவார்கள்.. இதனால், வார இறுதி நாட்களில் தமிழகத்தின் மீன் மார்க்கெட்களில் மீன்களின் வரத்து அதிகமாக காணப்படும்.
பலத்த காற்று - குறைவான வரத்து
ஆனால், கடந்த 2 நாட்களாகவே பலத்த காற்று, வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உள்ளிட்ட காரணங்களால் இன்று வரத்து குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.. இதன்காரணமாக மீன்களின் விலை திடீரென உயர்ந்தது.. எனினும் விலையை பொருட்படுத்தாமல் மீன் பிரியர்கள் மீன்களை வாங்கி சென்றனர்..
சென்னை காசிமேட்டில் 1 கிலோ நெத்திலி மீன் ரூ.150க்கும், ஷீலா/ சீலா மீன் 1 கிலோ ரூ.350க்கும், நண்டு 1 கிலோ ரூ.150க்கும், வஞ்சிரம் மீன் விலை 1 கிலோ ரூ.700க்கும், வவ்வால் மீன் 1 கிலோ ரூ.600க்கும், இறால் 1 கிலோ ரூ.300க்கும், சங்கரா மீன் 1 கிலோ ரூ.175க்கும், சால்மன் மீன் 1 கிலோ ரூ.300க்கும், மத்தி மீன் 1 கிலோ ரூ.100க்கும், சுறா மீன் 1 கிலோ ரூ.350க்கும், ஜிலேபி மீன் விலை 1 கிலோ ரூ.200க்கும் விற்பனையாகிறது.
தூத்துக்குடி 1 கூடை சால்மன் மீன்
அதேபோல, தூத்துக்குடியிலும், கடற்பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக கரை திரும்பிய படகுகளில் மீன்களின் வரத்து குறைவாகவே இருந்தது..
இன்று தூத்துக்குடி மார்க்கெட்டில், சீலா மீன் ஒரு கிலோ ரூ.1000 வரை விற்கப்படுகிறது.. விளமீன், ஊழி, பாறை மீன்கள் கிலோ ரூ.400 முதல் 600 வரையும், சால்மன் ஒரு கூடை ரூ.2500 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
நண்டு கிலோ ரூ. 600 வரையும், தோல் கிளாத்தி, கேரை, சூரை ஆகிய மீன்கள் கிலோ ரூ.180 முதல் 300 வரையும், திருக்கை மீன் ஒரு கிலோ ரூ.250 வரை விற்பனையானது... மீன்களின் விலை உயர்த்தி விற்கப்பட்டாலும், பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு வாங்கி சென்றதால், மீனவர்களுக்கு இன்று நல்ல லாபம் கிடைத்துள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications