சென்னையில் ஸ்டார் ஓட்டலில் சிக்கிய இசையமைப்பாளரின் மகள்! போதையில் கட்டிப்பிடித்தபடி 18 பேர் உல்லாசம்
சென்னை: இன்றைய இளைஞர்களிடம் போதை கலாச்சாரம் அதிகமாகிவிட்டது.. பண்ணை வீடுகள், நட்சத்திர ஹோட்டல்களில், நைட் பார்ட்டி, இசை விருந்து போன்ற பெயர்களில் நடக்கும் இரவு நேர விருந்துகளில் இளைய தலைமுறைகள் கலந்து கொண்டு சீரழிவதும் தொடர்கதையாகிவிட்டது. நேற்றைய தினம் 18 பேர் போலீஸ் ரெயிடில் கைதாகி உள்ளனர். இதில் பிரபல இசையமைப்பாளரின் மகளும் அடக்கமாகும்.. இதுகுறித்து கூடுதல் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் ஈவிஆர் சாலையில் செயல்பட்டு வரும் பப்பில், நேற்று முன்தினம் இரவு கஞ்சா பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனால், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட பப்புக்கு விரைந்து சென்றனர்.. அங்கிருந்த அறைகளில் சோதனையிட்டபோது, அங்கு ஒருவரும் இல்லை. பிறகு பப்புக்கு வந்தவர்கள், அருகிலுள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததும், உடனே அங்கே ஓட்டலுக்கு சென்றார்கள்.
18 பேரையும் சுற்றி வளைத்த பெண்கள்
அங்கு 3 பெண்கள் உள்பட மொத்தம் 18 பேரையும் போலீசார் சுற்றி வளைத்துவிட்டனர்.. இவர்கள் எல்லாருமே பப்பில் நடந்த பார்ட்டியில் பங்கேற்றதும், மெத்தபெட்டமைன் போதைப்பொருள், கஞ்சா பயன்படுத்தியதும் உறுதியானது. இறுதியில் 18 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நட்சத்திர ஓட்டல் பப்
மேலும் அவர்களின் 3 கார்கள், 2 பைக், 18 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடமிருந்து கஞ்சா போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பிறகு கைதானவர்கள் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதில், 18 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த செய்தியில் தற்போது கூடுதல் தகவல் வெளியாகியிருக்கிறது.. கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அந்த பிரபல நட்சத்திர ஓட்டல் செயல்பட்டு வருகிறதாம்.. இங்கு போதை பொருட்களுடன் பார்ட்டி நடப்பதாக போதை பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததுமே, நட்சத்திர ஓட்டலிலுள்ள பப்பில் சோதனை நடத்தினர்.
2 ரூம்களில் கட்டிப்பிடித்தபடி 18 பேர்
ஆனால் போலீசார் செல்வதற்குள் பப்பில் பார்ட்டி முடிந்து அனைவரும் அதே ஸ்டார் ஹோட்டலில் 2 ரூம்களை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு பிறகுதான், அவர்கள் புக் செய்த 2 ரூம்களுக்கு போலீசார் சென்றுள்ளனர்..
அப்போது 2 ரூம்களிலும் இளம்பெண்களும், இளைஞர்களும் கஞ்சா புகைத்து கொண்டிருந்தார்களாம்.. எல்லாருமே போதையில் ஒருவரையொருவர் கட்டிபிடித்தப்படி இருந்திருக்கிறார்கள்.. இதை பார்த்து அதிர்ந்த போலீசார், உடனே கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்து, மகளிர் போலீசாரை உடனடியாக ஸ்டார் ஓட்டலுக்கு வரவழைத்துள்ளனர்.
பெண்களுடன் உல்லாசம்
பிறகு, சைதாப்பேட்டை சுகுமார் (43), மண்ணடி முகமது இர்பான் (30), மப்பா (32), அப்துல் ஹக் (34), அபிலாஷ் (27), ஜனார்த் (26), பெருங்களத்தூர் சக்திவேல் (36), நம்மாழ்வார்பேட்டை கணேஷ் (32), ஏழுகிணறு பகுதி இப்ராகிம் (30), பெரியமேடு முகமது சாலிக் (25), கிண்டி ஆகாஷ் (27), மந்தைவெளி தசரதராஜ் (24), சிங்கப்பூர் பர்கான் (27), புரசைவாக்கம் வினோதன் (30), கொண்டிதோப்பு துளசி ராமன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல கஞ்சா போதையில் இருந்த சூளைமேடு பிரவல்லிகா (23), திருவான்மியூர் ரெஜினா (21), விருகம்பாக்கம் துர்கா பவானி (25) ஆகிய 3 பெண்களையும் சேர்த்து மொத்தம் 18 பேரை கைது செய்து, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போதுதான் பல பகீர் தகவல்கள் வெளியாகின.
இவர்கள் அனைவரும் வாட்ஸ் அப் குரூப்பில் நண்பர்களாக இருப்பவர்களாம்.. வாரந்தோறும், கஞ்சா, மெத்தாபெட்டமின் பயன்படுத்தி இளம்பெண்களுடன் உல்லாசமாக இருப்பது இவர்களது வழக்கமாம். இதில், ஒவ்வொரு வாரமும் ஒருவர் பார்ட்டி வைப்பார்கள்.
வாரம் ஒருவர் பார்ட்டி
அந்தவகையில், நேற்று முன்தினம் நடந்த பார்ட்டிக்கு, அனந்தபுரத்து வீடு படத்தின் இசையமைப்பாளரின் மகள் பிரவலிகா (23) என்பவர் பார்ட்டி வைத்திருக்கிறார்..
பெங்களூருவை சேர்ந்த பிரவலிகா, பிரைவேட் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறாராம்.. இதற்காக சூளைமேட்டில் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருக்கிறாராம்.
தன்னுடைய ஆண் நண்பர்கள் மூலம் கஞ்சா, மெத்தாபெட்டமின் வாங்கியதுடன், ஹோட்டல் மேனேஜர் சுகுமார் உதவியுடன், அதே ஓட்டலில் ரூம் எடுத்து கஞ்சா பார்ட்டி வைத்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 5 கிராம் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இசையமைப்பாளர் மகள்
இசையமைப்பாளர் மகள் உள்பட 18 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதுமே, நடுவர் 18 பேரையும் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளார்..
எனினும், ஹோட்டல் மேனேஜர், பார்ட்டி வைத்த இசையமைப்பாளர் மகளிடம் விசாரணை நடக்கிறது.. இவர்களுக்கு கஞ்சா மெத்தாபெட்டமின் எப்படி கிடைத்தது? யாரிடமிருந்து வாங்கினார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications