2ம் கட்ட மெட்ரோ.. சென்னை மக்களே புதிய போக்குவரத்து மாற்றத்திற்கு தயாராகுங்கள்.. காவல்துறை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலை வழியாக சென்னை மெட்ரோ இரயில் 2ம் கட்டபணி துவங்கவுள்ள காரணத்தினால் 17.08.2021 முதல் போக்குவரதது மாற்றம் அமல்படுத்தப்படுகிறது.

சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது : சென்னை பெருநகர காவல்துறை போக்குவரத்து தெற்கு மாவட்ட எல்லைக்குட்பட்ட கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலை வழியாக சென்னை மெட்ரோ இரயில் 2ம் கட்டபணி துவங்கவுள்ளது.

இதன் காரணமாக 17.08.2021 அன்று காலை 06.00 மணிமுதல் 22.00 மணி வரையில் பரிச்சார்த்த முறையில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகின்றது.

ஆற்காடு சாலை

ஆற்காடு சாலை

போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் ஆற்காடு சாலையில் செல்லலாம். இவ்வாகனங்களுக்கு எவ்வித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவில்லை.

ஒருவழிப்பாதை

ஒருவழிப்பாதை


ஆற்காடு சாலையில் 80 அடி சாலை சந்திப்பிலிருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை ஒருவழி பாதையாக மாற்றப்படவுள்ளது. கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து சாலிகிராமம், போரூர் நோக்கி செல்லும் வாகனங்கள் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை, அசோக்நகர் 2வது அவின்யூ சாலை, பி.டி.ராஜன் சாலை,
ராஜமன்னார் சாலை, 80 அடி சாலை வழியாக ஆற்காடு சாலை செல்லலாம் மற்றும் வன்னியர் சாலை வழியாக விருகம்பாக்கம் செல்லலாம்.

வடபழனி செல்லும் வழி

வடபழனி செல்லும் வழி

கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வடபழனி சந்திப்பிற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை, அசோக்நகர் 2வது அவின்யூ சாலை, ஜவஹர்லால் நேரு 100 அடி சாலை வழியாக வடபழனி சந்திப்பை அடையலாம்.

போரூர் மார்க்கம்

போரூர் மார்க்கம்


போரூர் மார்க்கத்திலிருந்து கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் 80 அடி சாலையில் வலதுபுறம் திரும்பி இராஜமன்னார் சாலையில் இடதுபுறம் திரும்பி பி.டி.ராஜன் X இராஜமன்னார் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி கே.கே.நகர் காவல் நிலையம் வழியாக கே.கே.நகர், உதயம் செல்லலாம்.

 அசோக் நகர் வழி

அசோக் நகர் வழி

அசோக் பில்லர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் சாலையில் அசோக்நகர் காவல் நிலையம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அசோக்நகர் 2வது அவின்யூ சாலை, ஜவஹர்லால் நேரு 100அடி சாலை, ஆற்காடு சாலை வழியாக கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லலாம்.

துரைசாமி சாலை

துரைசாமி சாலை

வடபழனி சந்திப்பிலிருந்து தியாகராயநகர் நோக்கி செல்லும் வாகனங்கள் துரைசாமி சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி துரைசாமி சாலை, 2வது அவின்யூ சாலை, நேராக 8வது தெரு, 3வது அவின்யூ,வில் இடதுபுறம் திரும்பி 4வது அவின்யூ சந்திப்பு வழியாக தியாகராயநகர் செல்லலாம்.

 100 அடி சாலை

100 அடி சாலை

கே.கே.நகரிலிருந்து பி.டி.ராஜன் சாலை வழியாக வரும் வாகனங்கள் ராஜமன்னார்- பி.டி. ராஜன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ஜவஹர்லால் நேரு 100 அடி சாலை, 2வது அவின்யூ செல்ல அனுமதி இல்லை. மாறாக இடதுபுறம் திரும்பி ராஜமன்னார் சாலை, 80 அடி சாலை வழியாக ஆற்காடு சாலை சென்றடையலாம். வன்னியர் தெருவிலிருந்து ராஜமன்னார் சாலையில் வரும் வாகனங்கள் நேரே செல்ல
அனுமதி இல்லை. மாறாக 80 அடி சாலை வழியாக ஆற்காடு சாலை சென்று செல்லவேண்டிய இடத்திற்கு செல்லலாம் அல்லது கே.கே.நகர், உதயம் வழியாக செல்லலாம்.

கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு மார்க்கெட்

முனுசாமி சாலை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வடபழனி மேம்பாலம் சர்விஸ் சாலையில் வரும் வாகனங்கள் வடபழனி சந்திப்பில் நேராக செல்ல அனுமதி இல்லை. வழக்கம் போல இடதுபுறம் திரும்பி ஆற்காடு சாலை சென்று துரைசாமி சாலை வழியாக அசோக் பில்லர் நோக்கி நேராக செல்லலாம்.

Recommended Video

    LIVE: TN Budget 2021 - தமிழக பட்ஜெட் 2021
    கோடம்பாக்கம் பாதை

    கோடம்பாக்கம் பாதை

    சாலிகிராமத்திலிருந்து கோடம்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஒருவழி பாதையில் வரும்பொழுது பேருந்து மற்றும் வணிக வாகனங்கள் சாலையின் இடதுபுற ஓடுதளத்திலும், (Left Lane), இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் சாலையின் வலதுபுற ஓடுதளத்தில் (Right Lane) செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள் சாலையின் வலதுபுற ஓடுதளத்தில் (Right Lane) செல்லக்கூடாது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+