Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடுங்கையூரில் மகிழ்ச்சி.. விரைவில் சபாஷ் மாற்றம்.. மேயர் பிரியாவை கவனிச்சீங்களா? சென்னையே நிமிருது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெருங்குடி போலவே, கொடுங்கையூரும் சென்னைவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதைவிட முக்கியமாக, மேயர் பிரியா தலைமையில், கொடுமைங்கையூர் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தினமும் சராசரியாக 5,100 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டும் வருகின்றன.

Chennai Kodungaiyur garbage dump complex and Mayor Priya says about dumping Complex recovery

குறிப்பாக, பெருங்குடி குப்பை கிடங்கு 225 ஏக்கர் பரப்பளவில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அமைந்திருக்கிறது. இவற்றில் பல வருடங்களாகவே, சேர்ந்துள்ள 30 லட்சம் கன மீட்டர் குப்பையை முழுமையாக மறுசுழற்சி செய்து, 100 சதவீத நிலத்தை மீட்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

பயோ மைனிங்: பல ஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை பயோ-மைனிங் முறையில் பிரித்தெடுத்து, நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பயோ மைனிங் முறைக்காக, சுமார் 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் மீட்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணிகள் தற்போது இறுதிகட்டத்தையும் எட்டிவிட்டன..

இந்த குப்பை கொட்டும் வளாகத்தில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது. கடந்த வருடம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் மீட்டெடுக்கப்பட்ட இடத்தில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் புதிய சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் நேரு அறிவித்திருந்த நிலையில், கருத்து கேட்பு கூட்டத்தையும் மேயர் பிரியா கடந்த மாதம் கூட்டியிருந்தார்.

பெருங்குடி: சில நாட்களுக்கு முன்பு, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் 62 லட்சம் டன் குப்பையும், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் 32 லட்சம் டன் குப்பையும் சேர்ந்துள்ளது. இதில் பெருங்குடியில் 50 ஏக்கருக்கு மேலான நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது போல, கொடுங்கையூரிலும் இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்று கூறியிருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தை ரூ.640 கோடி செலவில் மீட்பதற்கு பணி ஆணையை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தற்போது தீர்மானம் அதிரடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டங்கள்: சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடந்தபோது, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் மிக முக்கியமான தீர்மானமாக பார்க்கப்படுவது, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள 21 லட்சம் டன் கழிவுகளை அகழ்ந்தெடுத்து, அந்த பகுதியை மீட்க ரூ.640 கோடி மதிப்பில் 6 அலகுகளாக பணிகளை மேற்கொள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்குப் பணிஆணை வழங்க வேண்டும் என்பதுதான்.

தீர்மானங்கள்: இதைத்தவிர, மாநகராட்சி பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள தெரு மின் விளக்கு கம்பங்களில் விளம்பரம் செய்து சுமார் ரூ.26 கோடியே 79 லட்சம் வருவாய் ஈட்டுவதற்கும் மன்றக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது, மாநகரப் பகுதியில் 1-வது மண்டலம் முதல் 8-வது மண்டலம் வரையிலான பகுதிகளில் சேகரமாகும் ஈரக்கழிவுகளிலிருந்து 31 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கும் மன்றக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+