சென்னை டூ கோவை.. வந்தே பாரத் ரயிலில் ஏற்பட போகும் முக்கிய மாறுதல்? என்னனு தெரியுமா?
சென்னை: சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயில் சேவையை வரும் ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சென்னை செண்டிரலில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருவிற்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை - கோவை இடையே இயக்கப்பட இருக்கும் வந்தே பாரத் ரயிலும் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய போக்குவரத்து துறையின் முதுகெலும்பாக ரயில்வே துறை உள்ளது. நாடு முழுவதும் தினமும் பல ஆயிரக்கணக்க்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
மலிவான கட்டணம், சொகுசு, பாதுகாப்பான பயணம் போன்றவற்றால் பயணிகள் பெரும்பாலும் தொலை தூர பயணங்களுக்கு ரயிலைத்தான் நாடுகின்றனர்.

வந்தே பாரத் ரயில்
இதனால், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ரயில்வே துறையை மேம்படுத்த மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. சதாப்தி, ராஜ்தானி உள்ளிட்ட சொகுசு ரயில்களின் வரிசையில் வந்தே பாரத் ரயிலையும் ரயில்வே அறிமுகம் செய்தது. விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னை டூ கோவைக்கு
நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து கோவைக்கும் வந்தே பாரத் ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

8-ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்
சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணிகள் அதிக அளவு பயணிப்பதை காண முடியும். அதுவும் வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் சென்னை - கோவை இடையே இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி இந்த வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

8 பெட்டிகளாக இயக்க திட்டம்
இதனிடையே, சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலில் பெட்டிகளை 8 ஆக குறைத்து இயக்க அதிகாரிகள் ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக வந்தே பாரத் ரயில்கள் 16 பெட்டிகள் கொண்டதாக இயக்கப்படுகிறது. காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிட்டு இருப்பதால் பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் 8 பெட்டிகளாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பயண நேரம் குறையும்
எனினும் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. சேலம், திருப்பூரில் மட்டுமே நின்று செல்ல உள்ள வந்தே பாரத் ரெயிலில் பகல் நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்காது. எனவே, 16 பெட்டிகளுடன் ரயிலை இயக்கினால் வருவாய் இழப்பு ஏற்படும் எனக் கருதி 8 பெட்டிகளை கொண்டு இயக்க ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை மற்ற ரயில்களைவிட வேகமாக செல்வதால் சென்னை - கோவை இடையேயான பயண நேரம் 6 மணி நேரம் 10 நிமிடங்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications