32 வயசுல துர்க்காதேவி விபச்சாரம்! சென்னை கோயம்பேட்டில் வாடகை வீட்டில் நாராயணன் அநியாயம்! போலீஸ் செம
சென்னை: தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் முறைகேடாக செயல்படும் ஸ்பா சென்டர்கள், போலியாக செயல்படும் மசாஜ் சென்டர், சலூன்களில், பாலியல் தொழில் நடத்தப்படுவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. எனவே, போலீசாரும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கைகளை அரங்கேற்றி கொண்டுள்ளனர். அந்தவகையில், சென்னை கோயம்பேட்டிலும் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது..
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. ஹோட்டல்கள், ரிசார்ட்கள், லாட்ஜ்கள் மட்டுமல்லாமல், வாடகைக்கு குடியிருப்பது போல வீட்டில் தங்கியிருந்தும் சிலர் விபச்சார தொழிலை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பாலானோர் குடியிருக்கும் அப்பார்ட்மென்ட்களில் இதுபோன்ற செயல்கள் இன்னும் அதிகமாகவே நடக்கிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் இவ்வாறு ஏதாவது சந்தேகத்துக்கிடமாக தென்பட்டால், பொதுமக்களே, போலீசாருக்கு நேரடியாக புகார்களை அனுப்பிவிடுகிறார்கள்..
விபச்சாரம் - பாலியல் தொழில்
இந்த புகார்களை விசாரணை செய்யும் போலீசார், தயவுதாட்சண்யமின்றி பெண்களை வைத்து விபச்சாரம் செய்யும் நபர்களை கைது செய்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களை மீட்டும் வருகிறது. பிழைப்புக்காக உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் அப்பாவி பெண்கள்தான், விபச்சார கும்பலிடம் சிக்கி கொள்வதாக தெரிகிறது.. இவர்களை பாதுகாப்பாக மீட்டு அரசு காப்பகங்களிலும் போலீசார் ஒப்படைத்தும் வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், முறையான அனுமதி இல்லாமல், அல்லது லைசென்ஸ்களை புதுப்பிக்காமல், செயல்பட்டு வரும் ஸ்பா சலூன்களையும் இழுத்து பூட்டி சீல் வைக்கப்படுகின்றன..
ரகசிய கண்காணிப்பு
சமீபத்தில்கூட, வில்லிவாக்கம், மேட்டு தெருவில் உள்ள ஒரு வீட்டை ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. உடனே 2 பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இறுதியில், விபச்சாரத் தொழில் நடத்திய ஹரிகிருஷ்ணன்(35) என்பவரை கைது செய்ததுடன், அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த 2 பெண்களையும் பத்திரமாக போலீசார் மீட்டனர்.
கோயம்பேடு நெற்குன்றம்
இந்நிலையில், சென்னை கோயம்பேடு பகுதியில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.. கோயம்பேடு நெற்குன்றம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக அங்குள்ளவர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது.. பிறகு அதனை உறுதி செய்து கொண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரின்பேரில் உதவி கமிஷனர் யாஸ்மின் உத்தரவின்பேரில் விபச்சார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தனர்.. அப்போது வடபழனி பகுதியை சேர்ந்த நாராயணன் எனற புரோக்கரையும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த துர்காதேவி என்ற 32 வயது பெண்ணுடனும் சேர்ந்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
கைதானவர்களிடம் விசாரணை
இதையடுத்து, இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர். வாடிக்கையாளர்களை பிடிக்க பயன்படுத்திய 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் மீட்கப்பட்ட 2 பெண்களுமே படித்த பட்டதாரி பெண்களாம்.. எப்படி இவர்களிடம் வந்து சிக்கினார்கள் தெரியவில்லை.. அதுமட்டுமல்ல, கைது செய்யப்பட்டுள்ள நாராயணசாமி, பாலியல் புரோக்கர் தொழிலில் பிரபலமானவராம்.. இவருக்கு 45 வயதாகிறது.. தற்போதுதான் போலீஸ் வலையில் சிக்கியிருக்கிறார். கைதான நாராயணசாமி மற்றும் துர்காதேவியிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications