முதல்முறையாக.. கோயம்பேடு மார்க்கெட் தந்த அறிவிப்பு.. கடைகள் லீவு.. சென்னை மக்களே.. இதை நோட் பண்ணுங்க
சென்னை: வாக்குப்பதிவு தினத்தன்று கோயம்பேடு மார்க்கெட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜுன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வருகிற 19-ம் தேதி, ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க போகிறது..

வாக்குப்பதிவு: 19 வாக்குப்பதிவு என்பதால், 17-ந்தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும். அதனால் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளிலிருந்து, வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
அதனைத்தொடர்ந்து தமிழக அரசு 3 நாட்களை டாஸ்மாக் மூடப்படும் என அறிவித்துள்ளது. அத்துடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந்தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. அதுபோலவே, கோயம்பேடு மார்க்கெட்டும், வாக்குப்பதிவு தினத்தன்று மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மார்க்கெட்: கோயம்பேடு மார்க்கெட்டை பொறுத்தவரை, மலர், காய், கனி, உணவு தானிய சந்தை வளாகங்கள் இயங்கி வருகின்றன.. இவைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.. கிட்டத்தட்ட 10000க்கும் மேற்பட்டோர் சுமை தூக்குதல், தள்ளு வண்டி இயக்குதல், கடைகளில் கணக்குகளை எழுதுவது, கனரக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களும் வாக்களிக்க ஏதுவாக, வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ம்தேதி கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை விடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு: இது தொடர்பாக கோயம்பேடு வணிக வளாக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் சொல்லும்போது, "கோயம்பேடு சந்தை பணியாளர்களும் எந்தவிதமான தடையுமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ம் தேதி காய்கறி மற்றும் உணவு தானிய வளாகம் ஆகியவற்றுக்கு முழு விடுமுறை விடப்படுகிறது என்றார்.
இதனிடையே, மலர் சந்தை மட்டும், 19-ம்தேதி வழக்கம்போல் இயங்கும் என்றும் கடைகளுக்கு விடுமுறை இல்லை என்று பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், எப்போதுமே பழ சந்தைக்கு விடுமுறையே விட்டதில்லையாம்.. பொங்கல் தினத்தன்று கூட இந்த பழச்சந்தை பிஸியாகவே இயங்கும்.. இப்போதுதான் முதல்முறையாக விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications