கோயம்பேட்டில் "தேவியின் திருவிளையாடல்".. சென்னை விபச்சார பெண்ணும், அந்த கோழிக்கறி பீஸும்.. அட ஆண்டவா
சென்னை: 5 வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆணும், பெண்ணும், கோழி பிரியாணி சாப்பிட்டார்களாம்.. இப்ப அது தொடர்பாக ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள் போலீஸார்... அப்படி என்ன செய்துட்டார் அந்த நபர்?
கடந்த 2019-ல் இந்த சம்பவம் நடந்தது.. கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில், ஒரு இளம்பெண்ணும், இளைஞரும் சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்டிருக்கிறார்கள். பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தபோது, 2 பேருக்கும் வாக்குவாதம் வந்துள்ளது.. அதுவே தகராறாக உருவெடுத்துள்ளது... வாக்குவாதம் முற்ற துவங்கியிருக்கிறது.

ஒரு கட்டத்தில், அந்த இளைஞருககு ஆவேசம் வந்து, இளம்பெண்ணை சரமாரியாக தாக்கினார்.. அந்த பெண்ணும் பதிலுக்கு தாக்கியதாக தெரிகிறது. உடனே ஆத்திரம் அடைந்த இளைஞர், தன்னிடமிருந்த கத்தியை எடுத்து, அந்த பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டார்.. உடனே அந்த பெண்ணும், ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டார்..
கொடூரம்: அதற்குள் சத்தம் கேட்டு, கோயம்பேடு வியாபாரிகள் ஓடிவந்தனர்.. ஆனால், சடலத்தை பார்த்ததுமே பயந்துபோன அந்த இளைஞர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து கோயம்பேடு போலீசாரும் வழக்குபதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.. அந்த இளம்பெண் யார்? கொலை செய்த இளைஞர் யார்? என்று விசாரிக்க தொடங்கினார். போலீசாருக்கு கிடைத்த அந்த இளைஞர் பற்றின தகவல் தெரியவில்லை.
புழல் சிறை: அதனால், இறந்துபோன பெண்ணின் போட்டோ மட்டுமே ஒரே ஆதாரமாக இருந்தது. ஆனால், சரியான அடையாளம் கிடைக்கவில்லை.. அந்த போட்டோவை வைத்துக் கொண்டு அந்த பெண் யார் என்று விசாரித்தனர்.. யாருக்கும் அந்த பெண்ணை பற்றி தெரியவில்லை.. கடைசியாக பெண்ணின் படத்தை வைத்து புழல் சிறையில் உள்ள பெண் கைதிகளிடம் விசாரணை நடத்தினர்.
அப்போதுதான், இறந்துபோன பெண்ணின் பெயர் தேவி என்பதும், சென்னை மெரினா பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர் விபச்சார தொழிலை செய்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. தேவிக்கு 30 வயாகிறது.. மார்க்கெட்டுக்கு விபச்சாரம் செய்வதற்காக வந்துள்ளார்.. ஆனால் சம்பவத்தன்று யாருடன் வந்தார் என்பது தெரியவில்லை என்பதால், அந்த விசாரணை தீவிரமானது.
தலைமறைவு: இப்படிப்பட்ட சூழலில்தான், கோயம்பேடு காவல் மாவட்டத்துக்கு, புதிய துணை ஆணையர் உமையாள் பொறுப்பேற்றார்.. அவர் பொறுப்பில் அமர்ந்ததுமே, தலைமறைவாக உள்ள ரவுடிகளை எல்லாம் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டார்.. அதேபோல, கோர்ட்டில் ஆஜராகாமல் இருக்கும் வழிப்பறி கொள்ளையர்கள், கஞ்சா வியாபாரிகள், குட்கா வியாபாரிகள் என மொத்த பேரையும் ஒருவர் விடாமல் அதிரடியாக கைது செய்யும்படி சொன்னார்.
அதுமட்டுமல்ல, கண்டுபிடிக்காமல் போன வழக்குகளை, மறுபடியும் லிஸ்ட் தயார் செய்து குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். அப்போதுதான், குணா என்பவர் சிக்கினார்.
செய்யாறு மாவட்டம்: குணாவுக்கு 44 வயதாகிறது.. செய்யாறு மாவட்டத்தை சேர்ந்தவராம். கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.. உடனே போலீசார், குணா பற்றின தகவல்களை மேற்கொண்டபோதுதான், கடந்த 2019ல், தேவியின் கழுத்தை அறுத்து கொன்றது இந்த குணா என்பது உறுதியானது. கொலைக்கான காரணம் வெளியானது.
பாலியல் தொழில் செய்யும் தேவியை, அன்றைய தினம் கோயம்பேட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்.. 2 பேருமே பூ மார்க்கெட் பகுதியில் தண்ணி அடித்திருக்கிறார்கள்.. 2 பேருமே சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்டிருக்கிறார்கள்.
கொடூர கொலை: பிரியாணியில் தேவிக்கு சிக்கன் பீஸ் இல்லையாம்.. சாப்பிடும்போது சிக்கன் பீஸை தேவிக்கு குணா கொடுக்கவில்லையாம்.. சிக்கன் பீஸ் தனக்கு வேண்டும் என்று கேட்டாராம் தேவி.. இதுதான் அந்த சண்டை - தகராறு - வாக்குவாதம் - அடி தடி - கொலைக்கு காரணம்.
இப்போது குணா தலைமறைவாக இருக்கிறார்.. அதனால், குணாவுக்காகவே தனிப்படை அமைத்து போலீசார் அவரை தேடி கொண்டிருக்கிறார்கள்.. இவ்ளோ கஞ்சத்தனமானவரா குணா?? தேவிக்கு சிக்கன் பீஸ் கொடுக்காத அந்த குணா, இப்போது எங்கேயிருக்கிறார் என்றே தெரியலையே???












Click it and Unblock the Notifications