Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்பேட்டில் லுலு மால் வரல.. ஆனால் "அம்மா" வரப்போறாங்க.. இதுதான் நம்ம ஸ்டாலின்.. தமிழக அரசு சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு மார்கெட் தொடர்பான விவகாரங்களில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்தவகையில், மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

நம்முடைய தமிழக அரசை பொறுத்தவரை, கோயம்பேடு மார்க்கெட் விவகாரத்தில் மிகுந்த அக்கறையை காட்டி வருகிறது.. அந்தவகையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) கட்டுப்பாட்டில் உள்ள இந்த வளாகத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இங்கு மேற்கொண்டு வருகிறது.

Chennai Koyambedu Lulu Mall and Health Center in Koyambedu Market at Rs 85 Lakhs by Tamil Nadu CM MK Stalin

இப்போதுகூட, பூ மார்க்கெட் அருகில் பசுமை பூங்காஅமைக்க சிஎம்டிஏ முடிவெடுத்திருந்தது.. ஏராளமான சிறப்பம்சங்கள், நவீன வசதிகளுடன் இந்த பூங்காவை ரூ.16.50 கோடியில் 9 ஏக்கர் பரப்பில் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியையும் சிஎம்டிஏ சமீபத்தில் கோரியிருந்தது.

திரையரங்கம் : இந்த பூங்காவில் அடர்வனம், பசுமைபுல்வெளி, பருவகாலத்துக்கு ஏற்றவகையிலான சிறு குளம், விளையாட்டு மைதானம், குழந்தைகள் விளையாடும் பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சி மையம், நடைப்பயிற்சிக்கான இடம், திறந்தவெளி திரையரங்கம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த பூங்கா அமைக்கப்படுகிறதாம்.

இதைத்தவிர இந்த பூங்காவில் திறந்தவெளிப் பகுதி அதிகளவில் இருக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட உள்ளதாகவும், அதிகளவில் இருக்கை வசதிகள், போதிய விளக்குகள், நவீன கழிப்பிடங்கள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க உள்ளதாகவும், இன்னும் 4 மாதங்களில் இந்த பணிகளையெல்லாம் முடித்து திறக்கும் வகையில் இந்த பூங்காவுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

மார்க்கெட்: இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, கோயம்பேடு மார்க்கெட்டில் சுகாதார மையம் பேணுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கு, கடந்த 2018ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக் திறக்கப்பட்டது.

ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே முறையான பராமரிப்புகள் இல்லாமலும், போதுமான மருத்துவர்கள் இல்லாமலும், இந்த கிளினிக் மூடப்பட்டுவிட்டது. இதற்கு பிறகு, கொரோனா உச்சத்தில் இருந்தபோது, கடந்த 2020ல் மறுபடியும் இந்த கிளீனிக் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது... கொரோனா தொற்று குறைய துவங்கியதுமே, மறுபடியும் அம்மா கிளினிக் மூடப்பட்டுவிட்டது.

மார்க்கெட்: இப்படிப்பட்ட சூழலில், வியாபாரிகளின் நலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் சுதாதார மையம் அமைத்து தரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பையேற்றபோது உறுதி தந்திருந்தார்.

அதன்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் கூலி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக சுகாதார மையம் கட்ட அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்ட அம்மா கிளினிக்கை புதுப்பிக்க முடிவாகி உள்ளது.

சபாஷ்: சுகாதார மையமாக புதுப்பிக்க ரூ.85 லட்சம் மதிப்பில் பணிகள் ஆரம்பமாகி உள்ளன.. திமுக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாகர ராஜா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்திருக்கிறார்..

இந்த கிளினிக்குகள் கோயம்பேடு வியாபாரிகளுக்கு மிகுந்த பலனை தரும் என்பதில் சந்தேகமில்லை.. அத்துடன், தரப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் திமுக அரசு நிறைவேற்றி வருவதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+