கோயம்பேட்டில் லுலு மால் வரல.. கோயம்பேடு மார்க்கெட்டே மாற போகுது.. மாஸ் பிளான்.. கலக்குதே தமிழக அரசு
சென்னை: கோயம்பேடு மார்க்கெட் வேற லெவலுக்கு உயரப்போகிறது.. இது சம்பந்தமான சில தகவல்கள் வெளியாகி, சென்னைவாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
கோயம்பேடு விவகாரம் தலைதூக்கியபோதே, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் லுலு மால் வரப்போவதாக தகவல்கள் இணையத்தில் றெக்கை கட்டி பறந்தன. இதையடுத்து, பாமக தலைவர் அன்புமணி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கோயம்பேட்டிலுள்ள 36 ஏக்கர் நிலம், அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்படவிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
அரசு நிலம்: வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற பெயரில், மக்களுக்கு சொந்தமான நிலத்தை, பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை அனுமதிக்க முடியாது" என்று காட்டமாக கூறியிருந்தார் அன்புமணி.
அத்துடன், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம், சந்தைப் பூங்கா, கூடுதல் நிலம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 66 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
அன்புமணி: ஆனால், அன்புமணியின் இந்த லுலு மால் குற்றச்சாட்டை, தமிழக அரசு மறுத்து விளக்கம் ஒன்றை தந்திருந்தது.. அடிப்படை ஆதாரம் ஏதுமற்ற இந்த பொய்த்தகவலை உண்மை என்று நம்பி அரசியல் கட்சியினர் சிலரும், தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும், பரப்புவதும் குற்றச்செயலாகும்!" என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு பிறகு கோயம்போட்டில் லுலு மால் பரபரப்பு அத்துடன் அடங்கிவிட்டது.

இந்நிலையில், கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் 9 ஏக்கரில் நவீன வசதிகளுடன்கூடிய பூங்காவை ரூ.16.50 கோடிசெலவில் அமைப்பதற்காக தற்போது சிஎம்டிஏ ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
மார்க்கெட்: கோயம்பேடு மார்க்கெட்டை பொறுத்தவரை, 295 ஏக்கர் பரப்பளவு கொண்டது.. ஆசியாவின் மிகப்பெரிய மார்க்கெட் இதுவாகும்.. பழம், பூ, காய்கறி கடைகளுக்கென தனித்தனி வளாகங்கள் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. 1000-க்கும் மேற்பட்ட மொத்த, சில்லறை விற்பனைக் கடைகள் இந்த வளாகத்தில் உள்ளன.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) கட்டுப்பாட்டில் உள்ள இந்த வளாகத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பூ மார்க்கெட் அருகில் பசுமை பூங்காஅமைக்க சிஎம்டிஏ முடிவெடுத்திருக்கிறது.. ஏராளமான சிறப்பம்சங்கள், நவீன வசதிகளுடன் இந்த பூங்காவை ரூ.16.50 கோடியில் 9 ஏக்கர் பரப்பில் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியை சிஎம்டிஏ தற்போது கோரியுள்ளது.
பசுமை புல்வெளி: அந்தவகையில் இந்த பூங்காவில் அடர்வனம், பசுமைபுல்வெளி, பருவகாலத்துக்கு ஏற்றவகையிலான சிறு குளம், விளையாட்டு மைதானம், குழந்தைகள் விளையாடும் பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சி மையம், நடைப்பயிற்சிக்கான இடம், திறந்தவெளி திரையரங்கம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த பூங்கா அமைக்கப்படுகிறதாம்.
இதைத்தவிர இந்த பூங்காவில் திறந்தவெளிப் பகுதி அதிகளவில் இருக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட உள்ளன. மேலும் இப்பூங்காவில் அதிகளவில் இருக்கை வசதிகள், போதிய விளக்குகள், நவீன கழிப்பிடங்கள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க உள்ளார்களாம்.. 4 மாதங்களில் இந்த பணிகளையெல்லாம் முடித்து திறக்கும் வகையில் இந்த பூங்காவுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
கோயம்பேடு: கோயம்பேட்டிலிருந்து தென் மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் இப்போது அப்பகுதியில் பரபரப்பு குறைந்துள்ளது. அதேநேரம், பொதுமக்கள் பொழுது போக்குவதற்கான போதிய இடம் இல்லாத கோயம்பேட்டில், இந்த பூங்கா அமையும் பட்சத்தில் அதிக வரவேற்பைப் பெறும் என்றும் சிஎம்டிஏஅதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications