கணவரிடம் இருந்து குழந்தையை மீட்கக் கோரி தற்கொலைக்கு முயன்ற பெண்.. ஹைகோர்ட்டில் பரபரப்பு
சென்னை: கணவரிடம் இருந்து குழந்தையை மீட்டுத்தரக் கோரி பெண் ஒருவர், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தின் முன் தீக்குளிக்க முயற்சித்தார். இதனால் உயர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அமைந்தகரை சேர்ந்த துர்காதேவி - தமிழரசு தம்பதியருக்கு சிவானி என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த 6 ஆண்டுகாலமாக கருத்து வேறுபாடு காரணமாக கணவனும், மனைவியும் பிரிந்து வந்தனர்.

இந்த நிலையில், குழந்தையை கணவன் அழைத்து சென்றதால் மனமுடைந்த துர்காதேவி, காவல்துறையிடம் பல முறை புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், குழந்தையை மீட்டுத் தரக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற வாளாகத்தில் உள்ள குடும்பநில நீதிமன்றத்தின் முன், துர்காதேவி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் விரைந்து சென்று, துர்காதேவியை தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இச்சம்பவத்தால் உயர் நீதிமன்ற வளாகத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications