சென்னை கோவளம் கடற்கரைக்கு ஜாலியாக டூர் போன கள்ளக்காதல் ஜோடி.,.. நடந்த பயங்கரம்
சென்னை: கோவளம் கடற்கரைக்கு ஜாலியாக டூர் போன கள்ளக்காதல் ஜோடி. லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார் (28), திருமணமாகி மனைவி, குழந்தையுடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.
இவர் வேலை செய்யும் கம்பெனியில் தான் வேலூர் மாவட்டம் காகித பட்டறை பகுதியை சேர்ந்த துர்காதேவி (25) என்பவரும் வேலை பார்த்து வந்தார். துர்காதேவிக்கு திருமணமாகி கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

கள்ளக்காதல்
ஒரே கம்பெனியில் வேலை செய்து வந்ததாலும், அருகருகே உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதாலும் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னாளில் அது, கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.

காஞ்சிபுரம்
இந்நிலையில், துர்காதேவி வேலூரில் உள்ள பூர்வீக வீட்டிற்கு செல்வதாக , வசந்தகுமாரிடம் கூறியுள்ளார். அத்துடன் தன்னுடன் துணைக்கு வருமாறும் அழைத்துள்ளார். இதையடுத்து, இருவரும் வேலூர் வந்து, அங்கிருந்து காஞ்சிபுரம் சென்றிருக்கிறார்கள்.

கோவளம் கடற்கரை
பின்னர் நேற்று காலை இவர்கள் வாலாஜாபாத், வண்டலூர் வழியாக இருசக்கர வாகனத்தில் ஜாலியாக கோவளம் கடற்கரையை சுற்றிப்பார்க்க டூர் சென்றுள்ளனர்.
கேளம்பாக்கம் அருகே சோனலூர் என்ற இடத்தில் இவர்களது இருசக்கர வாகனம் சென்றுகொண்டிருந்த போது முன்னால் சென்ற கார் மற்றும் லாரிக்கு நடுவே முந்திச் செல்ல முயன்று உள்ளார்கள்.

தப்பி ஒடிய டிரைவர்
அப்போது, லாரியின் நடுவில் மோதியதால் தடுமாறி கீழே விழுந்துள்ளனர். அவர்கள் மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது.இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி வசந்தகுமார் (28) மற்றும் துர்காதேவி (25)உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications