சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று.. பால் தட்டுப்பாடு அபாயம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற பயத்தில் உள்ள ஊழியர்கள் பணிக்கு வர மறுப்பதால் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் தினமும் 2.38 பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு இரவு நேரங்களில் ஏற்றப்பட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் விநியோகம் செய்யப்படுகிறது.

Chennai Madhavaram aavin milk production company 2 workers affected Covid 19

இதே மாதவரம் பால் பண்ணையில் இருந்து சென்னையின் புறநகர் பகுதிகள் திருச்சி, புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஆவின் பால் அனுப்பி வைக்கப்படுகிறது,.

இந்நிலையில் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளர்களில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் வேலை செய்து வந்தது பேக்கிங் செக்சன் என்று கூறப்படுகிறது. அந்த செக்சனில் வேலை செய்த பிற தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு பயந்து நேற்று இரவு முதல் பணிக்கு வரவில்லை இந்த பேக்கிங் செய்யும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

கொரோனா கொரோனா "ஹாட் ஸ்பாட்" பகுதிகளுக்கு மசூதிகளின் பெயர்.. ஆதித்யநாத் அரசின் மூவ்.. பெரும் எதிர்ப்பு!

சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் வேலை செய்து வருகிறார்கள். தற்போது கொரோனா பயத்தில் வேலைக்கு வர தொழிலாளர்கள் அச்சப்படுவதால் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே மாதவரம் ஆவின் பால் பண்ணையில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
2 workers affected Covid 19 in Chennai Madhavaram aavin milk production company
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X