மதுரவாயலில் பைக் டாக்ஸியில் ஏறிய பெண்! பள்ளிக்கரணை ஒதுக்குப்புறத்தில் நள்ளிரவில் அசிங்கம்! அதிர்ச்சி
சென்னை: ரேபிடோ பைக் டாக்சியில் இரவு நேரத்தில் பயணித்துள்ளார் இளம்பெண்.. வானகரத்திலிருந்து பள்ளிக்கரணை வரை பைக்கில் சென்றபோது இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். என்றாலும் சென்னையில் நடந்த இச்சம்பவத்தின் அதிர்ச்சி கொஞ்சமும் விலகவில்லை.
ஒரேயொருவர் மட்டுமே பயணிக்கக்கூடிய அளவுக்கு வசதியாக பைக் டாக்சிகள் பல்வேறு நகரங்களில் இயங்கி வருகின்றன..

இந்த பைக் டாக்ஸி மூலம், எளிதாகவும், விரைவாகவும், பயணிக்க முடிகிறது. நினைத்த நேரத்தில், நினைத்த இடத்துக்கு பயணிகளால் பைக் டாக்ஸி மூலம் செல்ல முடிகிறது. எனவே பயணிகளிடம் மிகுந்த வரவேற்பை பைக் டாக்சிகள் பெற்று வருகின்றன.
எனினும், பைக் டாக்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்ற புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.. பாலியல் சீண்டல்கள் குறிப்பாக இரவு நேரங்களில் இந்த பைக் டாக்சிகள் மூலமாக நடப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
பைக் டாக்ஸி புகார்கள்
இந்த புகார்கள் அதிகமானதால்தான், இதனை ஆராய ஒரு குழு ஒன்று கர்நாடகாவில் அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பைக் டாக்சிகள் பெரிய அளவில் மக்களுக்கு உதவவில்லை என்று கூறவும், கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது.
ஆனாலும் பைக் டாக்ஸி டிரைவர்களால் ஏற்படும் பாலியல் கொடுமைகள் குறையவே இல்லை.. சென்னையிலும் இந்த அக்கிரமம் நடந்தபடியே உள்ளது.. 2 நாட்களுக்கு முன்பு மதுரவாயலிலும் நடந்தது..
வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கணவருடன் சென்னை, மதுரவாயலில் வசித்து வருகிறார். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன்னுடைய உறவினர் வீட்டிற்கு செல்ல இரவு ரேபிடோ பைக் டாக்சி புக் செய்துள்ளார்.
வேற ரூட்டில் போறீங்க
சிறிது நேரத்தில், அங்கு வந்த இளைஞர், தன்னுடைய பைக்கில் அப்பெண்ணை பள்ளிக்கரணை அழைத்து சென்றார். அங்கு சென்ற பிறகு சிறிது நேரம் காத்திருந்து, மறுபடியும் மதுரவாயலுக்கு அழைத்துச் செல்லுமாறு சொல்லி உள்ளார்..
உடனே இளைஞரும் அப்பெண்ணை பைக்கில் ஏற்றிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்.. திரும்பி வரும்வழியில், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு பைக்கை திருப்பியிருக்கிறார்.
உடனே இதை கவனித்த வடமாநில இளம்பெண், எங்கே வேற ரூட்டில் போறீங்க? என்று பைக் டிரைவரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனால் அந்த டிரைவர் எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் பைக்கை ஓட்டிக்கொண்டே சென்றுள்ளார்..
அசிங்கமான பாலியல் தொல்லை
இருட்டான பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு, பின்னால் உட்கார்ந்திருந்த இளம்பெண்ணை கீழே இறங்கும்படி சொல்லி உள்ளார்.. இதனால் என்னவென்று புரியாமல் திகைத்த அந்த பெண்ணும், பைக்கிலிருந்து இறங்கியிருக்கிறார்.
உடனே அப்பெண்ணின் கழுத்தைப் பிடித்து நெரித்துள்ளார் பைக் டிரைவர்.. இதனால் அந்த பெண்ணால் சத்தம் போட முடியவில்லை.. அந்த இளைஞரின் பிடியிலிருந்தும் தப்பிக்க முடியவில்லை. அப்போது அப்பெண்ணை மிரட்டிய இளைஞர், மிக மோசமான அளவுக்கு பாலியல் தொல்லைகளை அப்பெண்ணுக்கு தந்துள்ளார்.. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கடுமையாக போராடியிருக்கிறார்.
தேனி இளைஞர்
பிறகு அப்பெண்ணை அங்கேயே விட்டு விட்டு, தன்னுடைய பைக்கை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்... பிறகு நடந்த விஷயங்களை எல்லாம் தன்னுடைய கணவருக்கு போன் செய்து சொல்லி அழுதிருக்கிறார் இளம்பெண்.. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் வானகரம் போலீஸில் புகார் தந்தார்.. போலீஸாரும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, பைக் டிரைவரை தேடிப்பிடித்தனர்.
அப்போது நடத்திய விசாரணையில், இளைஞர், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்தது உறுதியானது... அந்த இளைஞர் பெயர் சிவக்குமார்.. 22 வயதாகிறது.. தேனி மாவட்டம் ஓடைப்பட்டி தாலுக்காவை சேர்ந்தவராம்.. இப்போது அவரை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.. அவரது பைக்கையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications