சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' கட்டாயம்.. மீறினால் ரூ.3,000 அபராதம்! மாநகராட்சி அதிரடி
சென்னை: சென்னையில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மைக்ரோ சிப் கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதற்காக 2 லட்சம் மைக்ரோ சிப்கள் வாங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள மாநகராட்சி, மைக்ரோ சிப் பொருத்தாத நாய்களின் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக தனியார் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கு விரைவில் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் எனவும், மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட நாய்கள் அதற்கென உருவாக்கப்பட்ட செயலி மூலம் கண்காணிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள்
சென்னை பெருநகரத்தில் தெரு நாய்களாலும், கட்டுப்பாடின்றி சுற்றும் வளர்ப்பு நாய்களாலும் பொதுமக்களுக்கு பெரும் தொந்தரவு ஏற்படுகின்றது. இரவு நேரங்களில் அலுவலகம் முடித்து வீடு திரும்புபவர்கள், பள்ளி சென்று வீடு திரும்பும் சிறுவர்கள், சிறுமிகள் மீது தெரு நாய்கள் கடித்து, தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தெரு நாய்கள் மட்டும் இன்றி போதிய கட்டுப்பாடுகள் இல்லாததால், வளர்ப்பு நாய்களால் கடிபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாய்கள் கடித்து சிறுவர் சிறுமிகள் முதல் இளைஞர்கள் முதியவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சம்பவங்களும், அதற்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இதனால் பலரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் ஆகும்
இது ஒரு புறம் இருக்க தெரு நாய்கள் மட்டும் வளர்ப்பு நாய்களும் அவ்வப்போது வீட்டை விட்டு வெளியேறி மற்றவர்கள் மீது தாக்குதல் நடத்துக்கிறது. இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை மாநகராட்சி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* பிட்புல், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட் போன்ற நாயினங்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
* இதன் காரணமாக செல்லப் பிராணிகளை வளர்ப்போர் தங்கள் நாய்களை வெளியே அழைத்துச் செல்லும்போது கட்டாயமாக வாய்மூடி அணிவிக்க வேண்டும்.
*வெறிநாய் தடுப்பூசி போட வேண்டும்.
* உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்
* வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே முழுப் பொறுப்பு.
* சென்னையில் சுமார் 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் வெறிநாய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* தற்போது வரை 11,000 தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
* சென்னையில் 12,500 பேர் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற்றுள்ளனர். மற்றவர்கள் உரிமம் பெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த மாதத்தில் இருந்து கட்டாயம் ஆகும்
* அடுத்த மாதத்திலிருந்து, வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயமாகும்.
* இதற்காக 2 லட்சம் மைக்ரோ சிப்கள் வாங்கப்பட்டுள்ளன
* இது தொடர்பாக விளக்கம் அளிக்க தனியார் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கு விரைவில் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
* நாய்களுக்கு தடுப்பூசி போட வரும்போது மைக்ரோ சிப் பொருத்தப்படவில்லையெனில், முதலில் கட்டாயம் பொருத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும்.
* அதையும் மீறி மைக்ரோ சிப் பொருத்தவில்லை என்றால், நாய்களின் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 வரை அபராதம் விதிக்கப்படும்
* மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட நாய்கள், அதற்கென உருவாக்கப்பட்ட செயலி மூலம் கண்காணிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கால்நடைத்துறை அதிகாரிகள் விளக்கம்
செல்லப்பிராணிகளான நாய்கள் வளர்ப்பு விதிமுறைகள் பலரால் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை எனவும், பராமரிக்க இயலாத வளர்ப்பு நாய்களை அவற்றின் உரிமையாளர்கள் தெருக்களில் விடுவதும் வழக்கமாகி வருவதுமே இது போன்ற சிக்கல்களுக்கு காரணம் எனவும் எனவே தான் வளர்ப்பு நாய்களின் உடலில் 'மைக்ரோ சிப்' பொருத்தும் திட்டத்தை மாநகராட்சி அறிவித்துள்ளது என்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரியில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், சிப் கொள்முதல் மற்றும் அதற்குத் தேவையான செயலி உருவாக்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு இருந்தன. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதத்திலிருந்து இந்த மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயமாகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
சென்னையில் பில்டிங் கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. முதல்வர் விஜய் உத்தரவு -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications