காதலிக்க மறுத்த மணிப்பூர் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த இளைஞர் கைது! சென்னையில் பகீர்
சென்னை: சென்னையில் காதலிக்க மறுத்த மணிப்பூர் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய விவகாரத்தில் ஆன்லைனில் இரு சக்கர வாகனம் ஓட்டும் தொழில் செய்து வந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் சென்னை சூளைமேட்டில் வசித்து வந்தார். இவருடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த நபர் ஒருவர் அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருவதாக புகார் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் வியாசர்பாடியை சேர்ந்த ஜோ ரிச்சர்ட் (28) என்பவர்தான் இது போன்ற கேவலமான செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
ஒரு பெண்ணை இப்படி ஆபாசமாக சித்தரித்து புகைப்படத்தை வெளியிட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார் அவரை கைது செய்தனர். இவர் ஆன்லைன் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வரும் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் தினமும் அந்த மணிப்பூர் பெண்ணை சூளைமேட்டிலிருந்து அழைத்துக் கொண்டு முகப்பேரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு அழைத்து சென்றுவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தாராம்.
இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. இந்த நிலையில் அந்த பெண்ணை காதலிப்பதை ஜோ, அவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணோ, ஜோவின் காதலை ஏற்க மறுத்துவிட்டார்.
இது ஜோவிற்கு கோபத்தையும் ஆத்திரத்தையும் மூட்டியது. இதனால் ஏஐ தொழில்நுட்பத்தில் அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து போலியான சமூகவலைதள பக்கத்தை உருவாக்கியுள்ளார். இதை அந்த பெண்ணுக்கும் அவர் அனுப்பியது தெரியவந்தது.
இந்த புகைப்படத்தை அந்த பெண்ணுக்கு காட்டி பணம் கேட்டு மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரிடம் இருந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதே போல் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடன் பணிபுரிந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அந்த பெண்ணுக்கு நல்ல வேலை வாய்ப்பை சொல்வதாக கூறி அவரிடம் பயோடேட்டாவை வாங்கினாராம். பிறகு அந்த பயோடேட்டாவில் இருந்த அந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து அந்த பெண்ணை ஆபாசமாக சித்தரித்ததாக சொல்லப்படுகிறது.
இதை அந்த பெண்ணின் இமெயிலுக்கு அனுப்பினாராம். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸில் அளித்த புகாரின் பேரில் ஆபாசமாக சித்தரித்த காட்பாடி இளைஞரை போலீஸார் கைது செய்தனர். செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ-யை நல்லதுக்கு பயன்படுத்தாமல் இது போல் கெடுதலுக்கு பயன்படுத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அறிவை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, இப்படி பழிவாங்குதலுக்காகவும் வஞ்சம் தீர்ப்பதற்காகவும் பயன்படுத்துவது மாபெரும் குற்றமாகும்.
இது போல் அன்றாடம் ஒரு விஷயங்கள் நடக்கின்றன. தற்போது தங்களுக்கு பிடித்த நடிகர் , நடிகைகளை கூட செயற்கை நுண்ணறிவு மூலம் பயன்படுத்துகிறார்கள். அது போல் நடிகைகளை Deep seek வீடியோ மூலம் ஆபாசமாக சித்தரிக்கிறார்கள். அண்மையில் கூட ராஷ்மிகா மந்தனா, கஜோல் உள்ளிட்டோரை இவ்வாறு சித்தரித்திருந்தார்கள்.












Click it and Unblock the Notifications