சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கணவரை பிரிந்த பெண்! வெறும் 30 நாளில் திருமண ஆசைக்காட்டி 3 பொண்டாட்டிக்காரர் செய்த லீலை! என்னாச்சு

Google Oneindia Tamil News

சென்னை: கணவரை பிரிந்த பெண்ணிடம் திருமணம் ஆசைக்காட்டி வெறும் 30 நாளில் ரூ.36 லட்சம், 13 பவுண் நகையை பறித்து கோவாவில் கூத்தடித்து கேரளாவில் மசாஜ் செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த 3 பொண்டாட்டிக்காரரரை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் வசித்து வருபவர் 35 வயது பெண். இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் தம்பதி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் அவர் 2வது திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து. இதையடுத்து வரன் பார்க்கும் ஆன்லைனில் தனது விபரங்களை பதிவு செய்தார்.

வீடு புகுந்து இளம் பெண்ணிடம் பலாத்கார முயற்சி.. ரவுடியை தட்டித் தூக்கிய போலீஸ்.. சென்னையில் ஷாக்! வீடு புகுந்து இளம் பெண்ணிடம் பலாத்கார முயற்சி.. ரவுடியை தட்டித் தூக்கிய போலீஸ்.. சென்னையில் ஷாக்!

போனில் தொடர்பு கொண்ட நபர்

போனில் தொடர்பு கொண்ட நபர்

இவரது ப்ரொபைலை பார்த்து ஜூன் மாதம் ஒரு நபர் தொடர்பு கொண்டு பேசினார். தனது பெயர் ஹபீப் ரஹ்மான் (வயது 38) என்றும், தனக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் மனைவி இறந்து விட்டதாகவும் கூறினார். மேலும், சென்னையில் வேலை பார்த்துக் கொண்டு தனியாக வசித்து வருவதாகவும், இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று வரன் பார்க்கும்போது உங்களது ப்ரொபைல் பார்த்து தொடர்பு கொண்டதாகவும் கூறினார்.

சொகுசு காரில்...

சொகுசு காரில்...

இதையடுத்து திருமணத்தை பற்றி பேச நேரில் வருமாறு அந்த பெண் கூறவே இவர் விலை உயர்ந்த சொகுசு காரில் பந்தாவாக சென்று பேசியுள்ளார்,அப்போது தனக்கு ஒரு அக்கா மற்றும் ஒரு அண்ணன் இருப்பதாகவும் அண்ணன் கனடாவிலும், அக்கா பூருனேவிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார். அழகான பேச்சு, அமைதியான குணம் நல்ல மனிதர் போல இருக்கின்றார் என அந்த பெண்ணும் நினைத்தார். மேலும் அந்த பெண் திருமணத்தை குறித்து பேசியபோது அக்கா ஜூலை மாதம் சென்னைக்கு வருகிறார். ்ப்போது திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

ரூ.10.60 லட்சம்

ரூ.10.60 லட்சம்


பின்னர் மூன்று நாட்கள் கழித்து அந்த பெண்ணிடம் அவசரமாக 60 ஆயிரம் ரூபாய் வேண்டும் எனவும் இரண்டு நாட்களில் தந்து விடுவதாக கூறியதும் உடனே அந்த பெண் பணத்தை கூகுள் பே மூலமாக அனுப்பியுள்ளார். பின்னர் ஐந்து நாட்கள் கழித்து கிஷ்கிந்தா பக்கத்தில் தனக்கு ஏக்கர் கணக்கில் நிலம் இருப்பதாகவும் அந்த இடம் குறித்து வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் அந்த வழக்கை முடிக்க பத்து லட்சம் தேவைப்படுவதாகவும் நிலம் கைக்கு வந்தால் கோடி கணக்கில் விற்பனை செய்து நம் இருவரும் செட்டில் ஆகிவிடலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். வருங்கால கணவர் தானே என்று நினைத்து அந்த பெண்ணும் ரூ.10 லட்சத்தை நேரில் வரவழைத்து கொடுத்துள்ளார்.

30 நாளில் ரூ.36 லட்சம் மோசடி

30 நாளில் ரூ.36 லட்சம் மோசடி

பின்னர் பழகிய 30 நாட்களில் சிறுக சிறுக 36,லட்சம் ரூபாய் மற்றும் 13,சவரன் தங்க நகையை வாங்கிக்கொண்டு ஹபீப் ரஹ்மான் சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜில் பணம் கொடுத்ததற்கு நன்றி பணத்தை திருப்பி தருவதாக கூறி பாய் சொல்லிவிட்டு செல்லை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
பின்னர் மூன்று மாதமாக பல இடங்களில் ஹபீப் ரஹ்மானை தேடி அவர் கிடைக்காததால் தாம்பரம் உதவி கமிஷனர் சிபி சக்கரவர்த்தி, ஹபீப் ரஹ்மான் என்ற நபர் தன்னை ஏமாற்றி பணம் மற்றும் நகை வாங்கிக் கொண்டு சென்றதாக கூறி புகார் அளித்துள்ளார்.

பூந்தமல்லியில்

பூந்தமல்லியில்

உடனே ஹபீப் ரஹ்மானை பிடிக்க ஐந்து பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவந்த நிலையில் சென்னை பூந்தமல்லியில் அவர் தனது மனைவியுடன் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்று ஹபீப் ரஹ்மானை கைது செய்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் பெருங்களத்தூர் பீர்க்கங்காரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருப்பதால் ஹபீப் ரஹ்மானை அந்த காவல் நிலையம் அழைத்து சென்று ஒப்படைத்தனர்.

மூன்று திருமணம் செய்த நபர்

மூன்று திருமணம் செய்த நபர்

அதன் பின்னர் போலீஸ் விசாரணையில் அவருக்கு ஏற்கனவே மூன்று திருமணம் ஆகி மனைவிகளுடன் வசித்து வருவதாகவும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் கணவன் இழந்தவர்கள் அவர்களை வெப் சைட் மூலமாக தேடிக்கண்டுபிடித்து பெண்களின் தொலைபேசி எண்ணை வாங்கி அவர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி திருமணம் செய்து கொள்ளாமல் நூதன முறையில் பணம் நகை வாங்கி விலை உயர்ந்த கார், 50 ஆயிரத்தில் வாட்ச், விலை உயர்ந்த ஆடைகள் வாங்குவதோடு, உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. மேலும் மாதம் 10 நாள் கோவா, மசாஜ் செய்து கொள்ள கேரளா என சுற்றுலா சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பணத்தை செலவு செய்ததாக..

பணத்தை செலவு செய்ததாக..

மேலும் அவரிடம் இருந்து விலை உயர்ந்த வாட்ச்,கார் இரண்டு சவரன் தங்க நகை மட்டுமே பறிமுதல் செய்தனர். இருப்பினும் ரூ.36 லட்சம் பற்றி கேட்டபோது அவர் கூலாக செலவு பண்ணிட்டேன் சார் என்று கூறி சிரித்துள்ளார்* பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் கொடுத்து 12 மணி நேரத்தில் மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்த நிலையில் பணம் மற்றும் நகையை வாங்கி தரும்படி ஏமாந்த பெண் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

English summary
Chennai police have arrested the person who has 3 marriage and wanted to marry a divorced woman. He just 30 days and snatched 13 soverign gold and Rs.36 lakhs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X