Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாட்ஸ் அப்பில் 50 அரசு சேவைகள்.. ஒரே இடத்தில் அனைத்தையும் பெறலாம்.. சென்னை மாநகராட்சியில் தொடக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் 50 சேவைகளை வாட்ஸ் அப் வழியாக மக்கள் பயன்படுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்துள்ளார். இதற்காக சென்னை மாநகராட்சி 94450 61913 என்ற வாட்ஸ்ஆப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது.

தமிழக அரசுக்கும், மெட்டா நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வாட்ஸ் அப் வழியாக அரசு சேவை வழங்கும் திட்டம் சென்னை மாநகராட்சியில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Chennai Mayor Priya Launches WhatsApp Services for 50 Tamil Nadu Government Facilities

அரசு திட்டங்களை பெறுவதற்கும், சான்றிதழ்கள் வாங்கவும், கட்டணம் செலுத்தவும் தினந்தோறும் அரசு அலுவலங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், அரசு திட்டங்களையும், சான்றிதழ்களையும் ஒரு நொடியில் வாட்ஸ் அப் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்ட 50 சேவைகளை, இனி தமிழக மக்கள் வாட்ஸ் அப் மூலமே பெறும் வகையிலான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் மெட்டா நிறுவனத்துக்கும் கையெழுத்தானது.

ஒரே ஒரு எண் மூலம் அணுகக்கூடிய சாட்பாட் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள தமிழக மக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்தும் தமிழக அரசு வழங்கும் 50 அத்தியாவசிய சேவைகளை பெற முடியும்.

அந்த வகையில் சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி, சென்னை குடிநீர் வாரியம் வரி மட்டும் கட்டணம் கட்டும் வசதி, ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம், சேர்க்கும் வசதி, முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி, இருப்பிடச் சான்றிதலுக்காக விண்ணப்பித்து சான்றிதழை பெறும் வசதிகள் உள்ளது.

மேலும் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம், வருமான வரிச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம், சொத்து வரியை செலுத்தலாம், பிறப்பு சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், வர்த்தகம் செய்வதற்கான லைசென்ஸ், மின் கட்டணத்தை செலுத்தும் வசதி, பேருந்துக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம், ரத்து செய்து கொள்ளலாம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் படகு இல்லத்தில் பயணம் செய்வதற்காகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் போன்ற 50 சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் இந்த சேவை வழங்கப்படுகிறது. அதிகபட்ச வார்த்தைகளை எழுதி மக்கள் தேவைகளை கேட்டறியலாம். அது மட்டுமல்லாமல் பல்வேறு சேவைகளை ஒரே சாட் பாட்டின் மூலம் பெற முடியும். ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு அலுவலகத்துக்கு மக்கள் அலைவதைத் தடுக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில், வாட்ஸ் அப் மூலம் 50 சேவைகளைப் பெற முடியும். இதற்காக சென்னை மாநகராட்சி 94450 61913 என்ற வாட்ஸ் அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+