தவெக தலைவர் விஜய் குறித்து வந்து விழுந்த கேள்வி.. சட்டென மேயர் பிரியா கொடுத்த எதிர்பார்க்காத பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதாகவும் இதனால் திமுக அரசை அகற்ற வேண்டும் என்றும் தவெக தலைவர் விஜய் கூறியிருந்தார். இத்தனை காலம் திமுகவை பெயர் சொல்லாமல் விஜய் மறைமுகமாக விமர்சித்து வந்த நிலையில், இப்போது முதல்முறையாக நேரடியாக விமர்சித்துள்ளார். இது பேசுபொருள் ஆன நிலையில், விஜயின் பேச்சுக்குச் சென்னை மேயர் பிரியா பதிலடி கொடுத்துள்ளார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்களுக்கான கோலப்போட்டிகள் நடைபெற்றது. பெண்களின் உரிமை சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தலை முன்வைக்கும் விதத்தில் ஆண்கள் பலரும் இந்த போட்டியில் ஆர்வமாகப் பங்கேற்றனர். இதன் இறுதிப் போட்டியைப் பெருநகர் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பங்கேற்று கோலங்களைப் பார்வையிட்டு பரிசுகளை வழங்கினார்.

Vijay Priya Chennai

மேயர் பிரியா

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, "இந்தியாவிலேயே முதல்முறையாகச் சென்னையில் நாங்கள் 2022ஆம் ஆண்டில் Gender and policy labஐ தொடங்கினோம். இதில் பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பாக உணர்கிறார்களா என்பது குறித்து பெண்களிடமே கருத்துகளைக் கேட்டறிந்தோம். சுரங்கப்பாதை மற்றும் பேருந்து நிலையங்களில் இரவு நேரங்களில் கூடுதல் வெளிச்சம் தேவை எனச் சொன்னார்கள். சில பகுதிகளை அவர்கள் குறிப்பிட்டும் சொன்னார்கள். அந்த இடங்களில் எல்லாம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

அதேபோல பாலின சமத்துவத்தை அடுத்த தலைமுறையினருக்குச் சொல்லிக் கொடுக்கும் வகையில் மாநகராட்சி பள்ளியில் முக்கிய திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளோம். பெண் குழந்தைகளுக்கு உள்ள உரிமைகள் என்ன? பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகள் எப்படி மதிக்க வேண்டும்? ஆகியவை குறித்துச் சொல்லிக் கொடுத்தோம். கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

தப்புன்னு தெரிஞ்சா, பட்டுனு கேட்போம் என்ற விழிப்புணர்வு திட்டத்தை 8 மாதங்களாக முன்னெடுத்து வருகிறோம். பொது இடங்களில் தவறு நடக்கும் போது பாதிக்கப்படும் பெண்களுக்குக் குரலாக இருக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம்.

பாதுகாப்பான நகரம்

நாட்டிலேயே பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை 2வது இடத்தில் இருக்கிறது. விரைவில் அது முதலிடத்திற்கும் வரும். இந்த வேலையைப் பெண்கள் தான் செய்ய வேண்டும் என்று இருப்பதை உடைத்து யார் வேண்டுமானாலும் எந்த வேலையை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே ஆண்களுக்கான இந்த கோலப்போட்டிகள் நடைபெற்றன. அதில் பல ஆண்கள் சிறப்பாக பங்கேற்று பரிசும் வென்றுள்ளனர்" என்றார்.

களத்திற்கு வராத தலைவர் விஜய்

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்திருந்தார். அது குறித்த கேள்விக்குப் பதிலளித்த மேயர் பிரியா, "அந்த தலைவர்கள் எல்லாம் இப்போது தான் வந்துள்ளனர். அவர்கள் இன்னும் அரசியல் களத்தைப் பார்க்க வேண்டி இருக்கிறது. நமது முதல்வர் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். புதுமைப் பெண் தொடங்கிப் பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் பல்வேறு பெண்கள் பயனடைந்து இருக்கிறார்கள்.

கல்லூரி படிப்பு தடைப்பட்டு இருந்த பெண்கள் பலரும் புதுமைப் பெண் திட்டம் காரணமாக இப்போது மீண்டும் கல்லூரிக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் தவெக தலைவர் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை" என்றும் தெரிவித்தார்.

வெயிலின் தாக்கம்

மேலும், போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும்போது வெயிலின் தாக்கம் காரணமாகப் பொதுமக்கள் மயக்கம் அடைவதைத் தவிர்க்க கடந்தாண்டு அமைக்கப்பட்ட பசுமை பந்தல் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டார். இந்தாண்டு மார்ச் மாதமே வெப்பம் தொடங்கிவிட்டதால் இப்போதே 14 இடங்களைத் தேர்வு செய்து பசுமை பந்தல் அமைக்கும் பணிகளைச் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+