Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பே சென்னை மேயர் ஆர்.பிரியாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததாம். அதனால்தான் அவர் இத்தனை நாட்களாக வெளியே எங்கும் செல்லாமல் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ரிப்பன் மாளிகைக்கு வந்தாராம்.
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு விடுப்பில் இருந்த பிரியா, 25 ஆம் தேதி மாமன்றக் கூட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: முதல்வரை இப்போதைக்கு சந்திக்க வாய்ப்பில்லை, மே மாதத்திற்கான மாமன்ற கூட்டமும் நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை என தெரிவித்தார். மேலும் புதிய அரசு பொறுப்பேற்பு நிகழ்விற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என துணை மேயர் மகேஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக), பெரும்பான்மை பெறாத நிலையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து, முதல்வர் விஜய் பொறுப்பேற்று 17 நாட்களாகின்றன.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா இதுவரை முதல்வர் விஜயை நேரில் சந்திக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேயரின் இந்தச் செயலுக்கு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் 63-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சிவராஜ் சேகரன் முன்வைத்துள்ள விமர்சனங்களை பார்க்கலாம். பதவியேற்பு விழா புறக்கணிப்பு: "முதல்வர் விஜயின் பதவியேற்பு விழாவை சென்னை மாநகராட்சியே முன்னின்று நடத்தியது. ஆனால், அதில் மேயர் பிரியா பங்கேற்கவில்லை. கடந்த காலத்தில் ஜெயலலிதா முதல்வரானபோது, அன்றைய சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்றதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்."
மரியாதை நிமித்தமான சந்திப்பு இல்லை: புதிய முதல்வர் பொறுப்பேற்று 17 நாட்களாகியும், மேயர் பிரியா அவரை மரியாதை நிமித்தமாகக் கூட சந்திக்கவில்லை.
பணிகளில் தொய்வு: மேயர் பிரியா மக்கள் பணிகள், மாநகராட்சி கூட்டங்கள் மற்றும் அலுவலக வருகை ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்துவதில்லை என சொல்லப்பட்டது.
இந்த நிலையில் மேயர் ஆர்.பிரியாவுக்கு தேர்தலுக்கு முன்பே காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் மருத்துவ விடுப்பில் இருந்தாராம். அதனால்தான் பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளாமல் இருந்தாராம். இந்த நிலையில் தற்போதுதான் ரிப்பன் மாளிகைக்கு வந்திருக்கிறார் என சொல்கிறார்கள்.
-
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications