கூல் ஆக போகும் 4 மாவட்டங்கள்! இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், இன்று தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழை விட்டாலும் தூரல் விடவில்லை என்பதை போல அக்னி நட்சத்திரம் முடிவடைந்துவிட்ட நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனாலும் ஆறுதல் அளிக்கும் விதமாக மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து மக்கள் மனதை குளிர்வித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்

வானிலை ஆய்வு மையம்

இதுகுறித்து என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு

13 மற்றும் 14 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

பதிவான மழை அளவு

பதிவான மழை அளவு

கடந்த 24 மணி நேரத்தில் கள்ளந்திரி (மதுரை) 7, மேட்டுப்பட்டி (மதுரை) 3, உதகமண்டலம் (நீலகிரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), சாத்தையாறு (மதுரை) 2 தலா, மருங்காபுரி (திருச்சி), சங்கரிதுர்க்கம் (சேலம்) தலா 1 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இன்று, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தெற்கு மகாராஷ்டிரா மற்றும் கோவா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தெற்கு மகாராஷ்டிரா, கோவா , கேரளா - கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+