தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் நடக்க போகும் வானிலை மாற்றங்கள்.. மழைக்கு எங்கெல்லாம் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்பட 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவாரூர், விழுப்புரம், தஞ்சை, மதுரை, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் பல இடங்களில் நேற்று நல்ல மழை பெய்தது.

இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மழை

மிதமான மழை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்.

லேசான மழையும் உண்டு

லேசான மழையும் உண்டு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியசையும் , குறைந்த பட்ச வெப்ப நிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

சென்னை வெப்ப நிலை

சென்னை வெப்ப நிலை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்,. நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

மழை பெய்த அளவு

மழை பெய்த அளவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வானூரில் 9 செமீ மழையும், முண்டியம்பாக்கத்தில் 7செமீ மழையும் பெய்துள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பாண்டிச்சேரி, மதுரை மாவட்டம் சோழவந்தான்,, திருவாரூர் மாவட்டம் குடவாசல் , விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஆகிய ஊர்களில் தலா 5 செமீ மழை பெய்துள்ளது.

பலத்த காற்று வீசும்

பலத்த காற்று வீசும்

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 35 கிலோமீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோர பகுதி மற்றும் அதை ஒட்டிய வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+