'ஆரஞ்ச் அலர்ட்..' அடித்து நொறுக்கப் போகும் கனமழை.. இந்த மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்க
சென்னை: காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உட்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன.
அதேபோல தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

ஆரஞ்சு அலர்ட்
இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழகக் கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக இன்று முதல் நவ. 2ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும், கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம்
அதேபோல நவ. 3 மற்றும் 4ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நோரத்குற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடந்த 24 மணி நேரத்தில் பரங்கிப்பேட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நன்னிலம், திருவாரூர், மணமேல்குடி, தலா 50 மி.மீ மழை பதிவாகியுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications