தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கோவை, வேலூர் உள்பட 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் ஓரளவு மழை பெய்துள்ளது என்றே கூறலாம். சென்னையில் கடந்த வாரம் நல்ல மழை கொட்டியுள்ளது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

5 மாவட்டங்களில் மழை

5 மாவட்டங்களில் மழை

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை,வேலூர் ஆகிய மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மிதமான மழை

மிதமான மழை

ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயமுத்தூர் தேனி. திண்டுக்கல், தென்தாசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் எப்படி?

சென்னையில் எப்படி?

சென்னையை பொறுத்தவரை அடுந்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுநிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் அதிகபட் வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சம் எங்கே?

அதிகபட்சம் எங்கே?

கடந்த 24 மணி நேரத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் 5 செ.மீ மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 5 செ.மீ மழை கொட்டியுள்ளது. திருக்கழுக்குன்றம்(செங்கல்பட்டு), திருவாலங்காட்டில்(திருவள்ளூர்) 3 செ.மீ மழை பெய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+