ஸ்டாலின் எங்கே? எடப்பாடியும் வரலயே, 60 வருட திராவிட அரசியலை வீழ்த்திய விஜய்! மிஸ்ஸான அரசியல் மாண்பு?
சென்னை: ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த அரசியல் கட்சி தலைவர்கள் இல்லாமலேயே விஜய்யின் பதவியேற்பு நடந்துள்ளது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி முதல்வர் நாற்காலியில் அமரும் விஜய்யின் பதவியேற்பு விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.. மாற்றத்தை நோக்கி காத்திருக்கும் மக்கள் மற்றும் ஸ்தம்பித்து நிற்கும் அரசு இயந்திரம் என அனைவரும் விஜய்யின் அடுத்தடுத்த அதிரடி நகர்வுகளை பெரும் எதிர்பார்ப்புடன் கவனித்து வருகிறார்கள்.. எனினும் தமிழகத்தை ஆண்ட தலைவர்கள் அந்த பதவியேற்பு மேடையில் மிஸ்ஸிங்.
தமிழக அரசியலில் இன்று ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது.. சுமார் 60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் அசைக்க முடியாத சாம்ராஜ்ஜியத்தை நடிகர் விஜய் தனது ஒற்றை ஆளுமையால் உடைத்து காட்டியிருக்கிறார்.. இந்த நிகழ்வு ஒட்டுமொத்த இந்தியாவையே சென்னை நேரு ஸ்டேடியம் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது..

பதவியேற்பு விழா
இதன் தொடர்ச்சியாக இன்று காலை 10 மணியளவில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் விஜய்யின் பிரம்மாண்ட பதவியேற்பு விழா நடைபெற்றது..
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழாவில் பங்கேற்கும்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.. ஆனால் அரசியல் களம் தற்போது சூடாக இருப்பதால் அவர்கள் இருவரும் இந்த விழாவில் பங்கேற்க வாய்ப்பு குறைவு என்றே ஆரம்பத்திலிருந்தே சொல்லப்பட்டது. எனினும் கடைசிவரை அவர்கள் பங்கேற்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை..
அரசியல் ரீதியாக கடுமையான மோதல்கள் இருந்தாலும், ஒரு புதிய அரசு அமையும் போது ஜனநாயக முறைப்படி மாற்று கட்சி தலைவர்களை அழைப்பது ஆரோக்கியமான அரசியலின் அடையாளமாக கருதப்படுகிறது.
ஜெயலலிதா - ஸ்டாலின்
கடந்த கால அரசியல் வரலாற்றை பார்த்தால் இதுபோன்ற பதவியேற்பு விழாக்களில் அரசியல் மாண்பு என்பது மிக முக்கியமாக கடைபிடிக்கப்பட்டது..
குறிப்பாக 2016ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்ற போது மு.க.ஸ்டாலின் அந்த விழாவிற்கு நேரில் சென்றிருந்தார்.. அப்போது ஸ்டாலினுக்கு பின்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஜெயலலிதா உடனடியாக ஸ்டாலினுக்கு முன்வரிசையில் இருக்கை வசதி செய்து தர உத்தரவிட்டது ஒரு சிறந்த அரசியல் மாண்பாக இன்றும் பேசப்படுகிறது.
ஆனால் இன்றைய சூழலில் ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் விஜய்யின் விழாவை புறக்கணிப்பது அரசியல் நாகரீகத்தில் ஒரு தொய்வை ஏற்படுத்துமோ என்கிற கேள்வி விமர்சகர்களிடையே எழுந்துள்ளது..
அரசியல் மாண்பு ஜனநாயகத்தின் அழகு
அரசியல் மாண்பு என்பது ஜனநாயகத்தின் அழகாகும்.. ஒரு புதிய அரசு அமையும்போது மாற்றுக்கருத்துகளை கடந்து வாழ்த்துவது மரபு என்றாலும், தங்கள் ஓட்டு வங்கியை தக்கவைக்கவும் அரசியல் ரீதியாக விஜய்யை அங்கீகரிக்க விரும்பாததாலும் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி இந்த விழாவை தவிர்த்திருக்கலாம்.. கடந்த காலத்தில் ஜெயலலிதா - ஸ்டாலின் காட்டிய அந்த அரசியல் நாகரீகம் தற்போது மிஸ் ஆவது வருத்தமளிப்பதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள்..
அதேசமயம் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. ஒருவேளை ஸ்டாலின் மற்றும் எடப்பாடி வராத சூழலில் ரஜினிகாந்த் மட்டும் இந்த விழாவில் கலந்து கொண்டால் அது தமிழக அரசியலில் ஒரு முக்கிய குறியீடாக பார்க்கப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதினார்கள்
ரஜினிக்கு அழைப்பு?
விஜய் மற்றும் ரஜினி ஒரே மேடையில் தோன்றும் அந்த நொடிக்காக ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் வட்டாரமும் ஆவலுடன் காத்திருக்கவே செய்தது.. இந்த சந்திப்பு நிகழ்ந்தால் அது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்றும் சலசலக்கப்பட்டது
தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை விதைத்துள்ள விஜய்யின் இந்த பதவியேற்பு விழா நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.. குறிப்பாக 2026 தேர்தலில் விஜய்க்கு கிடைத்துள்ள இந்த பிரம்மாண்ட ஆதரவு மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒரு பெரிய சவாலாகவே மாறியிருக்கிறது. இன்றைய பதவியேற்பு விழாவிற்கு பிறகு தமிழகத்தின் அரசியல் வரைபடம் முற்றிலும் மாறும் என்று கணிக்கப்படுகிறது.
விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் தற்போது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆட்சி மாற்றம் தமிழகத்திற்கு எந்த மாதிரியான நன்மைகளை தரப்போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.. இன்றைய விழா தமிழக அரசியலில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..












Click it and Unblock the Notifications