சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூரியனை விட்டு விலகும் பூமி.. தமிழகத்தில் கடுங்குளிர் நிலவுமா.. சென்னை வானிலை மையம் பதில்

Google Oneindia Tamil News

சென்னை: சூரியனிடம் இருந்து பூமி விலகிச் செல்வதால் தமிழகத்தில் கடுங்குளிர் நிலவும் என்பது தொடர்பாக எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை என வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

சூரியனை பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களும் சுற்றி வருகின்றன. பூமி ஆண்டுக்கு ஒரு முறை சூரியனில் இருந்து அதன் தொலைதூர நிலைக்கு செல்லும். இது அபேலியன் என்று அழைக்கப்படும்.

அது போல் பூமி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதை பெரிஹேலியன் என்பார்கள். பொதுவாக அல்பெலியன் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6 ஆம் தேதியே தொடங்கிவிடும். அது போல் பெரிஹேலியன் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கும்.

சூரியனிலிருந்து விலகி செல்லும் பூமி.. இன்று முதல் கடுங்குளிர் நிலவும்.. காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்புசூரியனிலிருந்து விலகி செல்லும் பூமி.. இன்று முதல் கடுங்குளிர் நிலவும்.. காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்பு

பூமியிலிருந்து சூரியன்

பூமியிலிருந்து சூரியன்

பூமியிலிருந்து சூரியனுக்கான சராசரி தூரம் 150 மில்லியன் கிலோமீட்டர் தூரம் ஆகும். அல்பெலியன் நிலையில் இருக்கும் போது 152 மில்லியன் கிலோ மீட்டர் தூரமாக இருக்கும். இதே பெரிஹேலியன் நிலையில் இருக்கும் போது பூமியிலிருந்து சூரியனுக்கான தூரம் 147 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும்.

அல்பேலியன்

அல்பேலியன்

அல்பெலியன் மற்றும் பெரிஹேலியன் இடையே உள்ள வித்தியாசம் 5 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். பூமி சூரியனை விட்டு வெகு தொலைவில் செல்லும் போது குளிர் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சூரியனிலிருந்து பூமி மிக தொலைதூர நிலையை இன்று அடைகிறது.

பூமி

பூமி

இது இன்று காலை 5.27 மணிக்கு தொடங்கியது. இது வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முடிவடைகிறது. இன்று முதல் சூரியனில் இருந்து பூமி 152 மில்லியன் கி.மீ. தூரத்தில் இருக்கும். அதாவது 66 சதவீதம் அதிக தூரம் ஆகும். பொதுவாக சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 9 கோடி கிலோ மீட்டர் தூரம் இருக்கும். ஆனால் அல்பெலியன் நிகழ்வின் போது 15.20 கோடி கி.மீ. தூரமாக அதிகரிக்கும். வழக்கமாக இருப்பதை விட 44 மில்லியன் கி.மீ. தூரம் பூமி செல்வதால் பூமியில் பல்வேறு நாடுகளில் குளிர்ச்சியான சூழல் நிலவும்.

9 கோடி கிலோ மீட்டர்

9 கோடி கிலோ மீட்டர்

இது இன்று காலை 5.27 மணிக்கு தொடங்கியது. இது வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முடிவடைகிறது. இன்று முதல் சூரியனில் இருந்து பூமி 152 மில்லியன் கி.மீ. தூரத்தில் இருக்கும். அதாவது 66 சதவீதம் அதிக தூரம் ஆகும். பொதுவாக சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 9 கோடி கிலோ மீட்டர் தூரம் இருக்கும். ஆனால் அல்பெலியன் நிகழ்வின் போது 15.20 கோடி கி.மீ. தூரமாக அதிகரிக்கும். வழக்கமாக இருப்பதை விட 44 மில்லியன் கி.மீ. தூரம் பூமி செல்வதால் பூமியில் பல்வேறு நாடுகளில் குளிர்ச்சியான சூழல் நிலவும்.

மறுக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம்

மறுக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம்

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் சூரியனை சுற்றியுள்ள பூமியின் நகர்வால் தமிழகத்தில் கடும் குளிர் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் பரவிய செய்தியில் உண்மை இல்லை. அவ்வாறு நாங்கள் எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English summary
Chennai Meteorological department refuses about heavy cold wave alert given by them. There is nothing truth in rumour spreading about that.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X