31-ஆம் தேதி தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: வரும் 31-ஆம் தேதி தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
இதுகுறித்து சென்னை வானிலை மையம் தனது செய்திக் குறிப்பில் கூறுகையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

மதுரை, திருச்சி, கரூர், தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், திருத்தணி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியல் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும். அடுத்து வரும் இரு தினங்களுக்கு விவசாயிகள், பொதுமக்கள் 11.30 மணி முதல் 3.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40- 50 கி.மீ. வரை வீசக்கூடும். அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தென் கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு, தென் மேற்கு அரபிக் கடல், வடக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி அல்லது பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை வீசக் கூடும். 27ஆம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதியில் உள்ள கடலுக்குள் செல்ல வேண்டாம்.
தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் 31 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 4ஆம் தேதி வரை மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என குறிப்பிட்டுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications