உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    chennai rain update | சென்னையில் அடுத்த 2 மணி நேரம் முக்கியம்

    சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்திற்கு சாதகமான புயல்கள் உருவாகாத நிலையிலும் கிழக்கு திசை காற்று மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்து வருகிறது.

    புதன்கிழமை இரவும், வெள்ளிக்கிழமை இரவும் கனமழை பெய்தது. அது போல் சனிக்கிழமை இரவும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.

    வெளியேற முடியவில்லை

    வெளியேற முடியவில்லை

    கிழக்கு தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகள் தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அது போல் காஞ்சிபுரத்தில் வரதராஜபுரத்திலும் தண்ணீர் தேங்கி ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் வெளியேற முடியாதபடி தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை

    நேற்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ,திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த 24 மணி நேரத்தில் 17 இடங்களில் கனமழையும் 3 இடத்தில் மிக அதிக மழையும் பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

    நீலகிரி

    நீலகிரி

    இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. அதாவது குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

    டிசம்பர் 4-இல் மழை

    டிசம்பர் 4-இல் மழை

    டிசம்பர் 3, 4-ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னையில் மிதமான மழை பெய்யும். தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் இன்று வரை 40 செ.மீ. மழை பெய்துள்ளது. இயல்பான மழை அளவான 36 செ.மீட்டரை விட11 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது என்றார் புவியரசன்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+