சென்னை உட்பட 15 மாவட்டங்கள்.. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை கொட்டும்! வானிலை மையம் ஹேப்பி நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மொத்தம் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடை வெயில் மிகவும் உக்கிரமாக இருந்தது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு வெப்பம் மிக மோசமாக இருந்தது. இதனால் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத ஒரு சூழலே இருந்தது.
குறிப்பாகச் சென்னையில் வெயில் கொளுத்தியது. இந்தாண்டு சென்னையில் மட்டும் மொத்தம் 18 நாட்கள் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த வாரம் சென்னையில் நிலைமை தலைகீழாக மாறியது. ஜூன் மாதம் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு வெப்பம் உச்சத்தில் இருந்த நிலையில், இப்போது சராசரி மழையைக் காட்டிலும் கூடுதலாக மழை பெய்துள்ளது. கடந்த வாரம் சென்னையில் பல இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கிய போதிலும், அவை சீக்கிரம் வடிந்துவிட்டது.

கடந்த சில நாட்களாகச் சென்னையில் வெப்பம் குறைந்து சற்று மிதமான வானிலையே நிலவி வந்தது. இதற்கிடையே இப்போது சென்னையில் கோடம்பாக்கம், சூளைமேடு, அரும்பாக்கம், அண்ணாநகர், முகப்போர், ஆவடி எனப் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கோடை வெயில் முடிந்து மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் சென்னையில் வெப்பம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் சென்னைவாசிகள் செம ஹேப்பியாக உள்ளனர்.
இதற்கிடையே சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மொத்தம் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மழை பெய்யும்
மேலும், விழுப்புரம், சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு எனக் கூறப்பட்டுள்ளது. இப்படி மொத்தம் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications