கஜா புயல்: நவம்பர் 15-ஆம் தேதி கனமழை பெய்யும்- சென்னை வானிலை மையம்
சென்னை: கஜா புயலால் வரும் 15-ஆம் தேதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது. இந்நிலையில் வங்கக் கடலில் புதிய புயல் ஒன்று உருவாகியுள்ளது.

அதற்கு கஜா என்ற பெயரை தாய்லாந்து வைத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ் பாலசந்திரன் கூறுகையில் வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவாழ காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.
நவ.15-ஆம் தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே முற்பகலில் புயல் கரையை கடக்கும். இதனால் நவம்பர் 14-ஆம் தேதியிலிருந்து மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வரை பலமான காற்று வீசும்.
14 மற்றும் 15-ஆம் தேதிகளில் தென் தமிழகத்தில் மழை பெய்யும் அதுபோல் வடதமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
14-ஆம் தேதி முதல் வங்கக் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே நவம்பர் 12-ஆம் தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் தங்கி மீன்பிடிப்பவர்களும் 12-ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்.
சென்னைக்கு கிழக்கே 930 கி.மீட்டர் தூரத்தில் புயல் மையம் கொண்டிருக்கிறது. வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை மற்றும் கனமழை பெய்யக் கூடும். கஜா புயலால் 14,15-ஆம் தேதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.
தீவிர புயலாக மாறினாலும் கரையை கடக்கும் போது தீவிரம் குறைந்த புயலாக மாறும். வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பான மழை அளவு 26 செமீ. தற்போது வரை 20 செ.மீ. பெய்துள்ளது என்று பாலசந்திரன் தெரிவித்தார்.
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications