Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டபுள் டக்கர்.. சென்னை ஆர்காடு ரோடு அப்படியே ஆடிப்போச்சே.. மெட்ரோ செய்த மேஜிக்.. ரோட்டுல பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் பணிக்கான சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ள நிலையில் இன்னொரு பக்கம் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை அளிக்க தயாராகும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை விரிவுபடுத்தும் விதமாக இந்த திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Chennai Metro double ducker pictures released by netizens : Have a look

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.

இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆர்காடு ரோடு: இதில் சென்னை ஆர்காடு ரோடு பகுதியில் இரண்டடுக்கு மெட்ரோ வர உள்ளது. அதாவது டபுள் டக்கர் மெட்ரோ வர இருக்கிறது. இதற்கான பணிகள் சென்னையில் நடக்க உள்ளது. இந்த டபுள் டக்கர் மெட்ரோ பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில், இந்த டபுள் டக்கர் மெட்ரோ பாலம் அமைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. chennaiupdates அமைப்பு சார்பாக இந்த புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. மேலேயும் கீழேயும் தலா 2 மெட்ரோ என்று 4 மெட்ரோ வரும்.

மெட்ரோ பணிகள்: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை விட ஆகஸ்டு மாதத்தில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 215 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது:- நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும், மே மாதத்தில் 72,68,007 பயணிகளும், ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகளும், ஜூலை மாதத்தில் 82,53,692 பயணிகளும் மற்றும் ஆகஸ்டு மாதத்தில் 85,89,977 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 11.08.2023 அன்று 3,29,920 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2023, ஜூலை மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 31,05,583 பயணிகள் (Online QR - 2,10,744; Static QR - 1,00,766; Paper QR - 24,64,111; Paytm - 1,59,737; Whatsapp - 1,70,225), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 47,56,951 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 3,26,491 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,685 பயணிகள் மற்றும் சிங்காரா சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 3,95,267 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

புதிய செய்தி: இந்த நிலையில்தான் சென்னை மெட்ரோவில் இனி மாலை நேரங்களில் மக்கள் எண்ணிக்கை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மெட்ரோவில் பயணம் செய்யும் மக்கள் எண்ணிக்கை 2.80 லட்சமாக உள்ளது. இது விரைவில் 3 லட்சம் ஆகும்.

அதாவது தினமும் 3 லட்சம் பேர் பயணம் செய்யும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில்தான் மாலை நேரங்களில் சென்னையில் பெய்யும் மழையால் மெட்ரோ பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்கிறார்கள். அதோடு மெட்ரோவில் இனி அதிக கூட்டத்திற்கு இடையில்தான் பயணம் செய்ய வேண்டிய நிலைமை இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மெட்ரோ: சென்னை மெட்ரோ பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. புதிய மெட்ரோ பாதைகளுக்கான கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளன. 2027ம் ஆண்டிற்குள் மெட்ரோ கட்டுமானம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+