சென்னை மெட்ரோவில் அதிரடி மாற்றங்கள்! இனி சிக்கலே இல்லாமல் சல்லுனு போகலாம்! இதை படிங்க முதல்ல
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் சென்னை மெட்ரோ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்னையில் இப்போது போக்குவரத்து நெரிசல் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. முன்பு ஓரிரு சாலைகளில் மட்டுமே போக்குவரத்து நெரிசல் இருந்த நிலையில், இப்போது கிட்டத்தட்ட அனைத்து முக்கிய சாலைகளிலும் வாகனம் நிரம்பி வழிகிறது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கச் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பொது போக்குவரத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ: அதன்படி சமீப காலமாகச் சென்னை மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இப்போது 54 கிமீ தொலைவுக்கு மெட்ரோ இயக்கப்பட்டு வருகிறது. விம்கோ நகர்- ஏர்போர்ட், பரங்கிமலை- சென்ட்ரல் ரயில் நிலையம் என இரு ரூட்களில் மெட்ரோ இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர மூன்று புதிய ரூட்களில் மெட்ரோ கட்டுமானமும் நடந்து வருகிறது. இவை முழுமையாக முடிவடையும்பட்சத்தில் விரிவான மெட்ரோ சேவையைக் கொண்ட ஒரு நகரமாகச் சென்னை மாறும்.
சென்னையில் மெட்ரோ சேவை தொடங்கப்பட்ட போது அதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும், அதன் பிறகு அந்த எண்ணிக்கை மெல்ல அதிகரித்தே வந்துள்ளது. மெட்ரோ பயணிகள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில் சேவையை அதிகரிப்பது, சலுகை விலையில் டிக்கெட் என பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மெட்ரோ சேவை: தற்போது சென்னை மெட்ரோ வார நாட்களில் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்குகிறது. அதேநேரம் வார விடுமுறை, விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. இப்போதெல்லாம் பெரும்பாலான நேரங்களில் மெட்ரோ கூட்டமாகவே காணப்படுகிறது. அதிலும் பீக் ஹவர்களில் கூட்டம் ஓவராகவே இருக்கிறது.
மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்களை இயக்க சென்னை மெட்ரோ முடிவு செய்துள்ளது. அதாவது பீக் ஹவர்களில் 7 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அந்த நிலையை மாற்றி பீக் ஹவர்ஸ் இல்லாத நேரங்களிலும் 7 நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பல்வேறு நடவடிக்கை: அதேபோல மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு வரும் டிச.3ஆம் தேதி ஒரு நாள் மட்டும் 5 ரூபாய் கட்டணத்தில் மெட்ரோவில் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அனைத்து ரூட்களிலும் எப்படி டிக்கெட் எடுத்தாலும் வெறும் ரூ.5 கட்டணத்தில் மெட்ரோவில் பொதுமக்கள் பயணிக்கலாம். இது தவிரப் பயணிகளை கவரும் வகையில் சென்னை மெட்ரோ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மெட்ரோ கார்ட் பயன்படுத்துவோருக்கு 20% சலுகை உள்ளது.
அதேபோல டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுப்பதைச் சென்னை மெட்ரோ ஊக்குவித்து வருகிறது. வாட்ஸ்அப் மற்றும் பேடிஎம் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி ஏற்கனவே சென்னை மெட்ரோவில் இருந்த நிலையில், போன் பே மூலம் சென்னை மெட்ரோ டிக்கெட்களை எடுக்கும் வசதியையும் சென்னை மெட்ரோ சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இப்படி சென்னை மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பயணிகள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications