உங்க கிட்ட பேடிஎம் இருக்கா? சென்னை மெட்ரோ வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு.. உடனே இதை படிங்க
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனம் Paytm நிறுவனத்துடன் இணைந்து Paytm செயலியில் QR டிக்கெட்டை பெறும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
பயணிகளின் கூடுதல் வசதிக்காக, இந்த கூடுதல் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே QR கோடு வசதி செயலில் உள்ள நிலையில் தற்போது Paytm செயலியில் QR டிக்கெட்டை பெறும் வசதியை மெட்ரோ அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் Paytm செயலியில் சென்னை மெட்ரோ மெட்ரோ என்று சர்ச் செய்து அதிலேயே டிக்கெட் பெற முடியும். மெட்ரோ ஸ்டேஷனில் இந்த டிக்கெட்டை ஸ்கேன் செய்து பயணம் செய்ய முடியும்.

எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்று கொடுத்து Paytm லேயே பணம் செலுத்தி கியூ ஆர் கோட் பெற முடியும். அதேபோல் வாட்ஸ் ஆப் சாட் பாட் மூலம் டிக்கெட் பெறும் வசதி ஏற்கனவே உருவாக்கப்பட்டு உள்ளது. மக்கள் கியூவில் நிற்காமல் எளிதாக பயணம் செய்வதற்காக இந்த வசதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
சென்னை மெட்ரோவில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க பல சூப்பர் திட்டங்களும் கொண்டு வரப்பட்டு உள்ளன. உதாரணமாக மெட்ரோவை இணைக்க இ ஆட்டோ சேவை, மெட்ரோவிற்கான புதிய கார்ட், மெட்ரோவில் அதிகம் பயணிப்பவர்களுக்கு பரிசு தொகை என்று பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
இதனால் நாளுக்கு நாள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 8 லட்சத்து 46 ஆயிரத்து 816 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதாவது சென்னை மெட்ரோ பயணத்திலேயே முதல்முறையாக புதிய ரெக்கார்ட் படைக்கப்பட்டு உள்ளது. விரைவில் பயணிகள் எண்ணிக்கை 1 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயின் முறை, க்யூ ஆர் கோடு முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
மெட்ரோ விளக்கம்: இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது:-
நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும், மே மாதத்தில் 72,68,007 பயணிகளும், ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகளும் மற்றும் ஜூலை மாதத்தில் 82,53,692 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக 28.07.2023 அன்று 3,08,495 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2023, ஜூலை மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 29,10,875 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 48,85,843 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 2,97,348 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,382 பயணிகள் மற்றும் சிங்காரா சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 1,54,244 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை சுத்தமாவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி, என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications