"3+3= 6.."சென்னை மெட்ரோ அதிரடி! எப்போதும் கூட்டமே இருக்காது! இனி எங்க வேண்டுமானாலும் ஜம்முனு போகலாம்
சென்னை: சென்னை மெட்ரோ கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மெட்ரோ நிர்வாகம் வரும் காலத்தில் அதை சமாளிக்க மெகா திட்டம் ஒன்றைக் கையில் எடுத்துள்ளது.
இந்தியாவில் அதிக கூட்ட நெரிசல் மிக்க இடங்களில் ஒன்றாகச் சென்னை இருக்கிறது. அதிகரிக்கும் டிராபிக், வாழ்வாதாரம் உள்ளிட்ட பல காரணங்களால் பொதுமக்கள் சென்னையை நோக்கி வருவது எனப் பல காரணங்களால் சென்னையில் டிராபிக் அதிகமாகவே இருக்கிறது.

டிராபிக்கை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே சென்னையில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது விம்கோ நகர் முதல் சென்னை ஏர்போர்ட், சென்டிரல் முதல் பரங்கி மலை என இரண்டு வழித்தடங்களில் 54 கிமீ தொலைவிற்கு மெட்ரோ இயங்கி வருகிறது.
மெட்ரோ விரிவாக்கம்: இதற்கிடையே இரண்டாம் கட்ட மெட்ரோ விரிவாக்க பணிகளும் இப்போது நகரில் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாதவரம்- சிறுசேரி, பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் என மூன்று வழித்தடங்களில் சுமார் 110 கிமீ தூரத்திற்கு மெட்ரோ விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே சென்னை மெட்ரோவில் விரைவில் வரும் 2ஆம் கட்டத்தில் ஆரம்பத்தில் மூன்று பெட்டிகள் கொண்ட ரயில்கள் மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், மெட்ரோ பயன்பாடு திடீரென அதிகரித்துள்ள நிலையில், மூன்று பெட்டிகள் கொண்ட இரண்டு ரயில்களை இணைக்கவும், அதன்படி மொத்தம் ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்கவும் சென்னை மெட்ரோ ஏற்பாடு முடிவு செய்துள்ளது.
புது பிளான்: சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் என்பது 116 கிமீ தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் அமைகிறது. இந்த ரூட்டில் மூன்று பெட்டிகள் மற்றும் ஆறு பெட்டிகள் என இரண்டு டைப் மெட்ரோ ரயில்களையும் இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், தொடக்கத்தில் மூன்று பெட்டிகள் கொண்ட ரயில்களை மட்டுமே இயக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டது. டெண்டர் தொடங்கி அதை மனதில் வைத்தே நடவடிக்கை எடுத்தது.
ஆனால், இப்போது முதலாம் கட்ட மெட்ரோவில் பயணிகள் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் இரண்டாம் கட்டத்திலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டத்தை மாற்றுகிறது. அதன்படி இரண்டு மூன்று பெட்டி மெட்ரோவை இணைத்து ஆறு பெட்டிகளைக் கொண்ட மெட்ரோவாக இயக்க முடிவு செய்துள்ளனர்.
கூட்டத்தைச் சமாளிக்க: இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "நாங்கள் 3 பெட்டிகளைக் கொண்ட மெட்ரோ ரயில்களுக்கே ஒப்பந்தம் போட்டுள்ளோம். எனவே, இரண்டாம் கட்ட மெட்ரோவுக்கும் மூன்று பெட்டி ரயில்களே இருக்கும், இருப்பினும், இப்போது திடீரென மெட்ரோவில் பயணிக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து இரண்டு மூன்று-பெட்டி ரயில்களை இணைத்து அதை ஆறு-பெட்டி மெட்ரோவாக இயக்க முடிவு செய்துள்ளோம்.
இரண்டாம் கட்ட மெட்ரோ படிப்படியாகவே செயல்பாட்டுக்கு வரும் எனவே, தேவையின் அடிப்படையில் இதைச் செயல்படுத்துவோம். ஏற்கனவே வெளிநாடுகளில் சில இடங்களில் இதுபோல மெட்ரோவை இயக்கி வருகின்றனர். நெரிசல் இல்லாத நேரங்களில் மூன்று பெட்டிகள் கொண்ட மெட்ரோ இயக்கப்படும். பீக் ஹவர்களில் 6 பெட்டிகளைக் கொண்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார். இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ 2025 இறுதியில் இருந்து படிப்படியாக செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications