பந்தாடிருச்சே! மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ரூ.210 கோடி சேதம்!
சென்னை: மிக்ஜாம் புயல் மழை பாதிப்புகளால், மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரூ.210 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு வாரம் கடந்தும் இன்னும் சில பகுதிகளில் முழுமையாக மழைநீர் வடியாத சூழல் உள்ளது.

மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட கடுமையான ஈடு செய்யும் வகையில், இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 450 கோடியும், சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து 561 கோடி ரூபாயும் மத்திய அரசு விடுவித்தது.
இந்நிலையில் சென்னையை தாக்கிய மிக்ஜாம் மழை, வெள்ள பாதிப்புகளால் மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரூ.210 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட திட்டத்தில் ரூ.15 கோடியும், இரண்டாம் கட்ட திட்டத்தில் ரூ.195 கோடியும் சேத மதிப்பாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேத மதிப்பு கணக்கீடு செய்து தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.
மிக்ஜாம் புயல் மழை காரணமாக, பொது போக்குவரத்து சேவைகள் கடுமையாக முடங்கியபோதும், மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. சில மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் மழைநீர் புகுந்தும், மின்சாரம் மற்றும் இணைய சேவையில் சிக்கல்கள் ஏற்பட்டபோதும், மெட்ரோ ரயில் நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளைச் செய்து, பயணிகளுக்கு உதவி புரிந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications