சென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. விரைவில் வரப்போகுது ஏகப்பட்ட வழித்தடம்.. ஜரூர் பணிகள்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 3-வது, 5-வது வழித்தடத்தில் மின்சார கட்டமைப்புகளுக்காக ரூ.533 கோடியில் விரைவில் பணிகள் தொடங்க உள்ளது. இந்த வழித்தடத்தில் அனைத்து வகையான மின்சார பணிகளுக்கான ஒப்பந்தமும் எல்&டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகரில் விமான நிலையம் முதல் விக்கோ நகர் வரையிலும், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும், கோயம்பேடு, தேனாம்பேட்டை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது.

இந்நிலையில் 2-வது கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் சுமார் ரூ.69 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இதில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 128 ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.. பல்வேறு இடங்களில் சுரங்கம் அமைக்கும் இயந்திரங்கள் பணிகளை செய்து வருகின்றன.
ஒவ்வொரு பகுதியாக பணிகளை செய்து முடிக்க நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டு பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. மாதவரம் பால்பண்ணை-சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம் ஆகியவற்றில் மின்சார பணிகளுக்கான ஒப்பந்தம் எல்&டி நிறுவனத்துக்கு ரூ.533.87 கோடியில் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் எல்&டி நிறுவனத்தின் ஒப்பந்த துணை மின்நிலைய வணிகப்பிரிவின் தலைவர் ஹெச்.ராஜேந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், மாதவரம் பால்பண்ணை-சோழிங்கநல்லூர் வரை 3-வது வழித்தடம், மாதவரம் பால் பண்ணை முதல் சிஎம்பிடி மற்றும் மாதவரத்தில் உள்ள பணிமனையில் துணை மின்நிலையம், துணை கட்டிடம் மற்றும் மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்துதல் அமைப்புக்கான அனைத்து வகையான மின்சார பணிகளுக்கான ஒப்பந்தம் எல்&டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது..
3-வது வழித்தடத்தில் 29 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 10 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள், 5-வது வழித்தடத்தில் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 11 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது என்றார்கள்.
இதனிடையே 3-வது வழித்தடத்தில் 35.043 கி.மீ. நீளத்துக்கும், 5-வது வழித்தடத்தில் 16.16 கி.மீ. நீளத்துக்கும், மாதவரம் பணிமனையில் 21 கி.மீ. நீளத்துக்கும் மேல்நிலை மின்சாரதளம் அமைக்கும் பணிக்கும் எல்&டி நிறுவனத்துக்கு ரூ.239.41 கோடியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாக சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications