இறங்கி வந்த நிர்வாகம்.. 3 நாளுக்கு பின் சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
சென்னை: நீக்கப்பட்ட 8 ஊழியர்களையும் பணியில் சேர்ப்பது குறித்து அந்த ஊழியர்கள் அப்பீல் செய்தால் பரிசீலிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் இறங்கி வந்ததால் வேலைநிறுத்தத்தை மெட்ரோ ரயில் ஊழியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயிலில் பணிபுரியும் ஊழியர்களின் நலனுக்காக 3பேர் தொழில்நுட்ப பணியாளர்கள், ஸ்டேசன் கண்ட்ரோலர்கள் 2பேர் டிராபிக் கண்ட்ரோலர்கள் மற்றும் ஒரு ஜுனியர் என்ஜினியர் உள்பட 8 பேர் சேர்ந்து தொழிலாளர் நல சங்கத்தை ஆரம்பித்ததாக குற்றம்சாட்டி அவர்களை பணியில் இருந்து நீக்கியது மெட்ரோ ரயில் நிர்வாகம்ட.
இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கணக்கான மெட்ரோ ரயில் ஊழியர்கள், கடந்த 3 நாட்களாக காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கி உள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 8 ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்த்தால் மட்டுமே பணிக்கு திரும்புவோம் என அறிவித்தனர்.

ரயில் சேவை பாதிப்பு
இதனால் கடந்த 3 நாட்களாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்காலிக பணியாளர்களை கொண்டு மெட்ரோ ரயில்களை இயக்கி வருகிறது மெட்ரோ நிர்வாகம்

முத்தரப்பு பேச்சுவார்த்தை
இதனிடையே சென்னை தொழிலாளர் நல அலுவலகத்தில், மெட்ரோ ரயில் நிர்வாகம், தொழிற்சங்கத்தின்ர், தொழிலாளர் நல ஆணையம் ஆகியோர் அடங்கிய அமர்வு, மெட்ரோ ரயில் ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்திவ வந்தனர்.

மெட்ரோ நிர்வாகம்
நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நல சங்கம் தொடங்கியதால் பணிநீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்தது., அதனால் பேச்சுவார்த்தை நேற்று தோல்வி அடைந்தது

போராட்டம் வாபஸ்
இதனிடையே தொழிலாளர் தினமான இன்று மாலை மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது தொழிலாளர் நல ஆணையர், மெட்ரோ நிர்வாக அதிகாரிகளிடம் பேசி 8 ஊழியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடுவது தொடர்பாக பரிசீலிக்கும் மாறு சமரசம் செய்தனர்.இதையடுத்து மெட்ரோ ரயில் நிர்வாகம் நீக்கப்பட்ட 8 ஊழியர்களையும் பணியில் சேர்ப்பது குறித்து அந்த ஊழியர்கள் அப்பீல் செய்தால் பரிசீலிக்கப்படும் என பேச்சுவார்த்தையில் தெரிவித்தது. இதையேற்று மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.நாளை முதல் பணிக்கு திரும்புவதால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை வழக்கம் போல் இருக்கும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications