சென்னை மெட்ரோ ரயில் அசாத்தியமான சாதனை .. வேறலெவல் வரவேற்பு.. கையோடு சொன்ன குட்நியூஸ்
சென்னை: 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 624 பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் அதிகமாக பயணித்துள்ளனர்.. சென்னை மெட்ரோ ரயிலில் பிப்ரவரியில் மட்டும் 86.15 லட்சம் பேர் பயணம் செய்துள்ளார்கள் என்று சென்னை மெட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.
சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் விமான நிலையம் முதல் திருவெற்றியூர் விம்கோ நகர் வரையில் இருவழித்தடங்களில் (கோயம்பேடு வழி மற்றும் தேனாம்பேட்டை வழி) மெட்ரோ ரயில்கள் செல்கிறது. இதேபோல் விம்கோ நகர் முதல் பரங்கிமலை வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த இருவழித்தடங்களிலும் சுமார் 55 கிமீ தூரத்திற்கு ரயில்கள் சென்று வருகிறது. இந்த மெட்ரோ ரயில்களுக்கு சென்னை மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. லட்சக்கணக்கான பயணிகள் தினமும் பயணிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மாதக்கணக்கில் பார்க்கும் போது விரைவில் ஒரு கோடியை எட்டும் நிலை வந்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 624 பயணிகள் மெட்ரோ ரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: 01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84.63.384 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.02.2024 முதல் 29.02.2024 வரை 86,15.008 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 09.02.2024 அன்று 3,26,786 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2024, பிப்ரவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 35,05,644 பயணதிகள் (Online QR 2,12,344: Static QR 2,32.315: Paper QR 21.29,890; Paytm 3,82,549; Whatsapp 3,70,008; PhonePe 1,76,751; ONDC 1.787), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 38,94,639 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 28,640 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,959 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 11,80,126 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட் Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி." இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளது.
முதற்கட்ட மெட்ரோவிற்கு பெரிய வரவேற்பு உள்ளதால் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. சென்னையின் வடக்கு எல்லை தொடங்கி தெற்கு எல்லை வரையில் அதாவது, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (45.4 கி.மீ) 3-வது வழித்தடம் அமைக்கப்படுகிறது. அதேபோல் கிழக்கு எல்லை முதல் மேற்கு எல்லை வரையில் அதாவது, கலங்கரை விளக்கம் -பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) வரையில் 4வது வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ.) 5-வது வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் வழித்தடங்களில் மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏராளமான சுரங்கப்பாதைகள், உயர்மட்டப்பாதைகள், சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதில் 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியான போரூர் - பூந்தமல்லி பாதை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 2025-ம் ஆண்டு இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் 2026 அல்லது 2027க்குள் முழுமையாக இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்கள் ஓடும் என்று நம்பலாம்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications