ஓஎம்ஆர் ஸ்ட்ரெச் முழுக்க.. அடியோடு மாறப்போகுது.. ஒவ்வொரு மெட்ரோ ஸ்டேஷனிலும்.. நடக்கும் மேஜிக்
சென்னை: அடுத்த வருடம் ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் போது, அங்கு அமைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்கள் சிறிய வணிக வளாகங்களாகவும் செயல்படும். பயணிகளுக்கும், அப்பகுதி மக்களுக்கும் உணவு விடுதிகள், ஆடை அங்காடிகள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் கிடைக்கும்.
மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் ஐடி பார்க் வரை 45.8 கி.மீ. நீளமுள்ள தடம் 3-ல், ஒன்பது உயர்மட்ட ரயில் நிலையங்களில் வணிக வசதிகளை வழங்கும் நுழைவு/வெளியேறும் இடங்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) வழங்கியுள்ளது.

மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் ஐடி பார்க்
நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய ரயில் நிலையங்களில் மூன்று தளங்கள் வரை கட்டும் ஒப்பந்தத்தை பிரிட்ஜ் அண்ட் ரூஃப் கம்பெனி (இந்தியா) லிமிடெட் நிறுவனம் ₹250.47 கோடி செலவில் பெற்றுள்ளது.
மெட்ரோ பாதை
இந்த நிலையங்கள் ஆரம்பத்தில் வெறும் கட்டமைப்புகளாகவே திட்டமிடப்பட்டன. ஆனால் பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், CMRL-க்கு கூடுதல் வருவாய் ஈட்டவும், அவை போக்குவரத்து சார்ந்த சொத்து மேம்பாட்டுப் பகுதிகளாக மாற்றப்பட்டன, என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். இந்த வணிக இடங்கள் வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்படும் என்றும் அவர் கூறினார்.
தடம் 3-ல் உள்ள மண்டவேலி பேருந்து நிலையம் மற்றும் தடம் 5-ல் உள்ள திருமங்கலம் மெட்ரோ நிலையங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பெரிய வணிக வளாகங்களைப் போலன்றி, இந்த மையங்கள் சிறியதாக இருக்கும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
சிறிய மால் போல செயல்படும்
அடுத்த வருடம் ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் போது, அங்கு அமைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்கள் சிறிய வணிக வளாகங்களாகவும் செயல்படும். பயணிகளுக்கும், அப்பகுதி மக்களுக்கும் உணவு விடுதிகள், ஆடை அங்காடிகள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் கிடைக்கும்.
மண்டவேலியில், ஏற்கனவே உள்ள பேருந்து நிலையத்திற்குள் சுரங்கப்பாதை நிலையத்தின் நுழைவு/வெளியேறும் கட்டமைப்புகள் அமையும். அங்கு இரண்டு ஸ்டில்ட்+ஏழு மாடி கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன. சோழிங்கநல்லூரில், தடம் 3 மற்றும் தடம் 5 சந்திக்கும் இடத்தில் எட்டு மாடி கட்டிடம் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் தடம் 3-ல், 28 சுரங்கப்பாதை மற்றும் 19 உயர்மட்ட நிலையங்கள் அமையவுள்ளன. இந்த திட்டத்தின் பணிகள் பல்வேறு நிலைகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
பேருந்து நிலையங்கள்
சென்னை மெட்ரோ நிர்வாகம், மெட்ரோ பணிகள் தவிர்த்து பல இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள், பேருந்து நிலைய புனரமைப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் ரூ.151 கோடி மதிப்பீட்டில் சில்லறை மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய மந்தைவெளி பேருந்து முனையம் கட்டப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRI) மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO) இணைந்து உருவாக்கிய சிறப்பு நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் (CMAML), மந்தவெளி பேருந்து முனையம் மற்றும் பணிமனையில் நவீன சொத்து மேம்பாட்டு கட்டிடத்திற்கான ஒப்பந்தத்தை ரூ.151 கோடி மதிப்பில் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தொகை உட்பட) கோரியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 3 வழித்தடம் 3-இல் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையமான மந்தைவெளி மெட்ரோ நிலையத்தின் நுழைவு வெளியேறும் கட்டமைப்புகள் தற்போதைய மந்தைவெளி பேருந்து நிலையம் மற்றும் பணிமனை வளாகத்திற்குள் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் இன்னொரு சிறப்பம்சமாக.. இந்த நிலத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்தும் நோக்கில் மெட்ரோ இரயில் நிலைய நுழைவுவெளியேறும் இடம், பேருந்து நிறுத்தம் மற்றும் புறப்படும் இடத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டிட அமைப்பு திட்டமிடப்பட்டு உள்ளது. சில்லறை மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த சொத்து வளர்ச்சி கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications