சென்னைவாசிகளுக்கு நற்செய்தி.. ரூ.5 மட்டுமே.. அதைவிடுங்க, இத்தனை சலுகையா? 3 கோடி பேரா? மெட்ரோ அசத்தல்
சென்னை: சென்னைவாசிகளின் வசதிக்காக பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளையும் மெட்ரோ நிறுவனம் வழங்கியுள்ள நிலையில், தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.. சென்ட்ரலிலிருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடமும், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகின்றன.

மெட்ரோவின் தேவையும் சென்னைவாசிகளால் தவிர்க்கவே முடியாதது.. அதனால்தான் மெட்ரோ நிறுவனமும், பயணிகளின் வசதிகளை கருதி பல்வேறு அதிரடிகளை வெளியிட்டபடியே உள்ளது.
மெட்ரோ ரயிலில் 100 ரூபாய்க்கு சிறப்பு பயண அட்டை மூலம் ஒரு நாள் முழுவதும் பயணிக்கலாம் என்ற அறிவிப்பு உட்பட Phonepe மூலமாகவே மெட்ரோ ரயில் டிக்கெட்களையும் பெற்றுக்கொள்ளும்படியான வசதி வரை அமலில் உள்ளது..
7 நிமிட இயக்கம்: அதேபோல, வெறும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பானது, மக்களை கவர்ந்திருந்தது. காரணம், 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை விம்கோ நகர், விமான நிலையம் போன்ற பகுதிகளில் மெட்ரோ சேவையானது 7 நிமிடங்களில் இயக்கப்பட்டது.
அதேபோல, 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, ஓட்டுநர் இல்லா ரயில்களை தயாரிக்க ரூபாய் 269 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.. அந்தவரிசையில், வெறும் 5 ரூபாயில், சென்னையின் எந்த பகுதிக்கும் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்ற இன்னொரு அதிரடியையும் அறிவித்திருந்தது.
இன்னும் இதுபோல பல்வேறு வசதிகளையும், சலுகைகளையும் மெட்ரோ செய்துவருவதால்தான், பயணிகளின் ஆதரவை பெற்றுள்ளது.. இதனால், நாளுக்கு நாள் மெட்ரோவில் பயணிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது.
பயணிகள் எண்ணிக்கை: அந்தவகையில், கடந்த வருடத்தைவிட விட 3 கோடி பேர் அதிகமாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
"சென்னை மெட்ரோ ரெயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட எட்டு ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளஅளவிற்கு 2023-ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளார்கள். கடந்த 2022-ம் ஆண்டில் 6.09 கோடி பேர் பயணித்துள்ளார்கள். 2022-ம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் 3.01 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள்.
தள்ளுபடிகள்: சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், மற்றும் போன்பே போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் பேடிஎம் ஆப் மூலமாகவும் பயணிகள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications