வெறும் 5 ரூபாய்.. மெட்ரோவில் எங்கே வேணும்னாலும் ஜாலியா போலாம்.. சென்னை மக்களுக்கு வந்த ஹேப்பி நியூஸ்
சென்னை: சென்னை மெட்ரோ நிறுவனம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், இதுகுறித்து மகிழ்ச்சி அறிவிப்பையும் அதிரடியாக வெளியிட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.. சென்ட்ரலிலிருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடமும், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக இன்னொரு வழித்தடம் செயல்பட்டு வருகின்றன.

சென்னைவாசிகள்: மெட்ரோவின் தேவையும் சென்னைவாசிகளுக்கு அத்தியாவசியமாகி வருகிறது.. எனவே, மெட்ரோ நிறுவனமும், பயணிகளின் வசதிகளை கருதி பல்வேறு அதிரடிகளை வெளியிட்டபடியே உள்ளது. குறிப்பாக, மெட்ரோ ரயிலில் 100 ரூபாய்க்கு சிறப்பு பயண அட்டை மூலம் ஒரு நாள் முழுவதும் பயணிக்கலாம் என்ற அறிவிப்பு உட்பட Phonepay மூலமாகவே மெட்ரோ ரயில் டிக்கெட்களையும் பெற்றுக்கொள்ளும்படியான வசதி வரை தற்போது கொண்டுவரப்பட்டது.
அதேபோல, வெறும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து, அதை அமல்படுத்தியும் காட்டியிருந்தது.. அதேபோல, 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, ஓட்டுநர் இல்லா ரயில்களை தயாரிக்க ரூபாய் 269 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அறிவித்து, மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
5 ரூபாய்: அந்தவரிசையில், வெறும் 5 ரூபாயில், சென்னையின் எந்த பகுதிக்கும் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்ற இன்னொரு அதிரடியையும் அறிவித்திருந்தது. வெறும் 5 ரூபாயில் பயணமா? என்று இதைக்கேட்டு பயணிகள் திகைத்து போய்விட்டார்கள்.. அதாவது, கடந்த 3ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாள் கொண்டாடப்பட்டது.
அன்றைய தினம் Static QR, Paytm, whatsapp Phonepe மூலம் வெறும் ரூ.5 கட்டணமாக செலுத்தி ஒருமுறை பயணத்திற்கான பயண சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என்றும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்க இந்த முயற்சியை மெட்ரோ நிறுவனம் மேற்கொண்டிருப்பதால், CMRL பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூ.ஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மிக்ஜாம் புயல்: ஆனால், எதிர்பாராத விதமாக மிக்ஜாம் புயல் சென்னையை உலுக்கி சென்றுவிட்டது.. இந்த புயலால் பொதுமக்கள் மெட்ரோவின் சலுகையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை..
எனவே, இன்னொரு நாளுக்கு இந்த சலுகையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. பொதுமக்களின் இந்த கோரிக்கையையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. அதன்படி, நாளை அதாவது ஞாயிற்றுக்கிழமை 17ம் தேதியும் 5 ரூபாய் கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அறிவிப்பு: அதே சமயம், கியூ ஆர் டிக்கெட்டுகள், மொபைல் கியூ ஆர், பேடிஎம், வாட்ஸ் அப், போன்பே உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்றும் சிங்கார சென்னை அட்டை, பயணச்சீட்டு, பாஸ்கள், சிஎம்ஆர்எல் மொபைல் ஆப் உள்ளிட்டவற்றின் மூலம் டிக்கெட் எடுப்போருக்கு 5 ரூபாய் சலுகை பொருந்தாது என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக, நாளை 17ம் தேதி கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும் என்பதால், கூடுதல் ரயில்களை இயக்க மெட்ரோ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications