ஏர்போர்ட்டை தாண்டியும் இனி மெட்ரோ பறக்கும்.. கொட்டி இறைக்கப்பட்ட பணம்.. ஆவடிதான் இனி அடுத்த ஆலந்தூர்
சென்னை: சென்னை மெட்ரோ இரயில் வழித்தடம் 3-ல் மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க 3 ஒப்பந்தங்கள் ரூ.4058.20 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் (3-CP03-UG- 03, C3-CP04-UG04 மற்றும் C3-CP05-UG05 ஆகிய பிரிவில் மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைப்பதற்காக ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்திற்கு ரூ. 4058.20 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் JICA நிதியுதவியின் ஒரு பகுதியாகும். இதற்கான ஏற்பு கடிதம் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்திற்கு 20.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது.

C3-CP03-UG-03 பிரிவிற்கான மதிப்பு ரூ.1730.60 கோடி, C3-CP04-UG04 பிரிவிற்கான மதிப்பு ரூ.1461.97 கோடி மற்றும் C3-CP05-UG05 பிரிவிற்கான மதிப்பு ரூ. 865.63 கோடி என மூன்று ஒப்பந்தங்கள் மொத்தம் ரூ.4058.20 கோடி மதிப்பில் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் வழங்கப்பட்டுள்ள இந்த மூன்று ஒப்பந்தங்களும் கீழ்ப்பாக்கம் மெட்ரோவில் இருந்து தரமணி வரை 12 சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைபதற்கான அனைத்து வகையான பணிகளும் மற்றும் 4 சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்களில் டயாபிராம் சுவர் தவிர மற்ற கட்டுமான பணிகளை உள்ளடக்கியது..
சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் தலைமையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் தி. அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் தலைமை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), பொது மேலாளர் ரவிச்சந்திரன் (சுரங்கப்பாதை), கூடுதல் பொது மேலாளர் டி.குருநாத் ரெட்டி, (ஒப்பந்த கொள்முதல்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
மெட்ரோ ரயில் விரிவாக்கம்: சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை அளிக்க தயாராகும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை விரிவுபடுத்தும் விதமாக இந்த திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆவடி போகஸ்: கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் பணிக்கான சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ள நிலையில் இன்னொரு பக்கம் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை அளிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை விரிவுபடுத்தும் விதமாக இந்த திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மெட்ரோவை கிளாம்பாக்கம் வரை கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சிறுசேரி - கிளம்பாக்கம், பூந்தமல்லி - பரனூர், கோயம்பேடு - ஆவடி வழிகளை இந்த ரூட்டில் இணைக்க முடிவு செய்துள்ளனர். சிறுசேரி - கிளாம்பாக்கம் இதன் மூலம் நேரடியாக இணைக்கப்படும். இந்த ரூட்டில் செல்ல 26 கிலோ மீட்டர் ஆகும். ஐடி பணியாளர்கள் எளிதாக கிளாம்பாக்கம் செல்ல வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் மேலே மெட்ரோ நிலையம் வரும் வகையில் இங்கே கட்டுமானம் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications