சென்னைவாசிகளுக்கு முக்கிய அப்டேட்.. இன்று முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்! எப்போது வரை தெரியுமா?
சென்னை: சென்னை மெட்ரோ பச்சை மற்றும் நீல வழித்தடத்தில் இன்று முதல் 24ஆம் தேதி, காலை 5 மணி முதல் 6.30 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதை ஒட்டி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக மெட்ரோ இயக்கப்படும் 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நீல வழித்தடத்தில் சென்னை விம்கோ நகரில் இருந்து சென்னை விமான நிலையம் வரையிலும், பச்சை நிற வழித்தடத்திலும் சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகிறது.
தற்போது சென்னை எழும்பூர் விமான நிலையம், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளிப் பண்டியைகையொட்டி சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

சென்னை மெட்ரோ
இந்நிலையில், சென்னை மெட்ரோ பச்சை மற்றும் நீல வழித்தடத்தில் இன்று முதல் 24 ஆம் தேதி, காலை 5 மணி முதல் 6.30 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதை ஒட்டி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,"சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரெயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம்.
மெட்ரோ ரயில் சேவை
பராமரிப்பு அட்டவணை மற்றும் மெட்ரோ இரயில் சேவை மாற்றங்கள் பின்வருமாறு:- பராமரிப்பு பணி காலம்: 20.10.2025 முதல் 24.10.2025 வரை. நேரம்: காலை 05:00 மணி முதல் 06:30 மணி வரை. இந்தக் காலகட்டத்தில் மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் நேரங்கள்:- மெட்ரோ ரெயில்கள் காலை 05:00 மணி முதல் 06:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
பச்சை வழித்தடம்
காலை 06:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கம்போல் எவ்வித மாற்றமும்மின்றி இயங்கும். இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். பராமரிப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
தண்டவாள பராமரிப்பு
ரெயில் பாதை பராமரிப்புப் பணிகள், ரெயில்களின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயக்கத்திற்கு மிகவும் அவசியம். பயணிகள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பராமரிப்புப் பணிகளால் ஏற்படும் சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருந்துகிறது. பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மெட்ரோ நேரம்
மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். பாதுகாப்பான மற்றும் திறமையான மெட்ரோ ரெயில் சேவையை உறுதிப்படுத்த, அனைத்துப் பயணிகளும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications