சென்னையில் மெட்ரோவில் பயணிக்கிறீர்களா? நாளை மட்டும் ஸ்பெஷல் ஆஃபர்! மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: சென்னை மெட்ரோ பயணிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் ஸ்பெஷல் ஆஃபரை அந்த நிறுவனம் அளித்துள்ளது.
சென்னையில் உள்ள கடும் போக்குவரத்தை குறைக்கும் முக்கிய பணிகளில் மெட்ரோ ரயில் ஈடுபடுகிறது. இதே காரணத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சென்னை பறக்கும் ரயிலை தொடர்ந்து மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் என இரு வழித்தடங்கள் உள்ளன. இந்தியாவில் டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மெட்ரோ திட்டத்திற்கு பிறகு 4ஆவதாக சென்னையில் மெட்ரோ தொடங்கப்பட்டது. இந்த ரயிலின் கோயம்பேடு- ஆலந்தூர் வரையிலான மெட்ரோ சேவையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலில் தொடங்கிவைத்தார்.
இந்த வழித்தடங்களில் குறைந்தபட்சம் ரூ 10 கட்டணமும் அதிகபட்சம் ரூ 40 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் நாளை மட்டும் மெட்ரோ சேவை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை ஒரு நாள் மட்டும் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும்.
விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறையையொட்டி போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த ரயில் சேவை நாளை ஒரு நாள் மட்டும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications