சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க போறீங்களா! இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.. பயணிகளுக்கு சூப்பர் அப்டேட்
சென்னை: மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் என்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் பயணிப்பது என்றாலே போதும் போதும் என்றாகிவிடும். சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதல்கட்ட மெட்ரோ ரயில் கடந்த 2016ம் ஆண்டு முதல் படிப்படியாக அமலுக்கு வந்தது.

தற்போது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரை மற்றும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கபட்டு வருகிறது. சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்ட பாதை இரண்டு பாதைகளிலும், இயக்கப்படுகிறது. சென்னை அண்ணா சாலையில் சுரங்கப்பாதை வழியிலும், வடபழனி, கோயம்பேடு பாதையில் உயர்மட்ட பாதையிலும் ரயில்கள் இயக்கப்படுகிறது.
பயணிகள் கோரிக்கை: இவை இல்லாமல் சென்னை பூந்தமல்லி டு கலங்கரை விளக்கம், மாதவரம் டூ சிறுசேரி, மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை மூன்று வழித்தடங்களில பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில்களில் சேவை தொடங்கப்பட்ட முதலில் பயணிகள் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தது. ஆனால், இப்போது பயணிகள் கூட்டம் மெட்ரோ ரயில்களிலும் அலை மோதி வருகிறது.
சரியன நேரத்திற்கு சென்று விட முடியும் என்பதால் பயணிகள் பலரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய விரும்புகின்றனர். பயணிகள் எண்ணிக்கை மெட்ரோ ரயில்களில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மெட்ரோ ரயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
7 நிமிட இடைவெளியில்: இந்த நிலையில், தான் சென்னையில் வரும் திங்கள்கிழமை முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த நிலையில் பயணிகளை எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications